Sunday, July 13, 2008

ஆக்கள் பாதுகாப்பு (கோசாலை)...



அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய புதுச்சேரி வாழ் மக்கள் பிரதிநிதிகளே!

இக்கடிதம் எழுதும் தி.ப. சாந்தசீலனாகிய நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் காந்தியடிகள் 1933 ஆம் ஆண்டே அரசியல் கட்சியிலிருந்து விலகித் தன்னைக் கட்சி சாராப் பொது மனிதராக அறிவித்தார் என்பதை நன்கு அறிந்து கொண்டவன்.


மேலும் மகாத்மா காந்திஅடிகள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ல் நடந்த தன்னுரிமைத் திருநாள் விழாக்களில் கலந்து கொள்ளாதவர். அவருடைய கருத்துக்கள் யாவும் உலக நன்மையை அடிப்படையாகக் கொண்டது. எந்தக் கட்சியையும் சார்ந்தது அல்ல என்பதை இதைப் படிக்கும் அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாய் பேரன்போடு வேண்டுகிறேன்.


இந்த மடலை எழுதும் யாமும், பசுக்கள் வயதான பிறகு அதாவது பால் கரக்கும் தன்மையை இழந்த பிறகு ஆரணி வேலூர் சி.எம்.சி மருத்துவமனை உள்ள வேலூர் நகரில், வேலூர் கோட்டைக்கு அருகில் உள்ள கோசாலையில் எமது பசுக்களைச் சேர்ப்பது வழக்கம்.


இந்த மடல் எந்த ஒரு விளம்பரச் சாதனங்களுக்கும் அனுப்பப்படுவது அல்ல. ஆனால் இதற்கு எழுத்து மூலமான பதிலை யாம் எதிர்பார்க்கிறோம்.பல்வேறு சிரமமான சூழ்நிலையிலும், நாட்டை சிறப்புடன் ஆள நினைக்கும் மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களுக்கு மீண்டும் ஒருமுறை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


காந்தியடிகளின் சிந்தனைச் சார்ந்த எமது கோசாலையைப் பற்றியக் கருத்துக்கள் பின்வருமாறு,கோசாலைப் பற்றியது :


1. கோசாலை என்பதன் பொருள் :- எருதுகளும், பசுக்களும் பால் கொடுக்கும் திறன் மற்றும் உழைக்கும் திறன் இழந்த பிறகு அதை ஓரிடத்தில் வைத்து பராமரித்து, அதாவது அதற்கு இயற்கையான மரணம் ஏற்படும் வரை அதைச் சிறந்த முறையில் அடக்கம் செய்யும் வரை பராமரிக்கும் இடத்திற்கு கோசாலை என்று பெயர்.பசு என்பது பழங்காலத்தில் "ஆக்கள்"என அழைக்கப்பட்டன.இவற்றைப் பாதுகாப்பதைப் பழந்தமிழர் உயர்வாக நினைத்தனர்.'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்' எனபது பழம் புறநானூற்று வரி.


2. கால்நடைகளுக்கான செலவு அதிகமாக இருக்கிறது. ஆனால் அவைகளால் கிடைக்கும் பலனுக்கும், அவைகளுக்காக நாம் செய்யும் செலவிற்கும், எவ்வித சம்மந்தமும் இல்லை. அதாவது அவைகளால் கிடைக்கும் பலனை விட நாம் செய்யும் செலவு மிகக் குறைவு என்பது பொருள்படும் (காந்தியடிகள் கிராம சுயராஜ்யம் பக்கம் 165.)


3. ஜீவகாருண்யம் உள்ளவர்கள் (உயிர்களிடத்தில் அன்பு) என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி. இதற்கான பதில் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரிந்ததே. அதாவது நாம் கால்நடைகளின் உயிர்களைப் பாதுகாப்பதுடன் அவைகள் நமக்கு சுமையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டு முயற்சியே இதில் பெருமளவு நமக்கு உதவமுடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். (கிராம சுயராஜ்ஜியம் காந்தியடிகள் பக் 165.)


4. கால்நடை பராமரிப்பு வி­யத்தில் தனிப்பட்ட முயற்சியானது சுயநலத்திற்கும், மிருகத்தனமான போக்கிற்கும் இடமளிக்கிறது. ஆனால் கூட்டு முயற்சியோ (மக்க¼ளா (அ) அரசாங்கமோ செய்வது) இந்த இரண்டையும் பூரணமாக ஒழிக்கவிட்டாலும் (சுய நலத்தையும் மிருகத்தனமான போக்கையும்) குறைக்கவாவது செய்யலாம். (காந்தியடிகளின்.கிராம சுயராஜ்ஜியம் பக். 167.) இவ்வாறெல்லாம் காந்தியடிகள் கால்நடை பராமரிப்பு பற்றி கூறியுள்ளார். இரத்தம் சிந்திச்சண்டை செய்து ஓய்ந்த உலகத்திற்கு சமாதானம் மற்றும் நல்லெண்ணச் செய்தியை இந்தியாவால் மட்டுமே கூறமுடியும் என்று காந்தியடிகள் கூறினார்.


ஆகவே கோசாலை அமைப்பது சப்தமில்லாத ஒரு அமைதிப் புரட்சியை நாட்டில் ஏற்படுத்திவிடும். ஆகவே கோசாலை அமைக்க அரசு உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கு எமது கருத்துகள் பின்வருமாறு:


1. நம் தமிழர்கள் உயிர்களிடத்தில் கருணை, அன்பு காட்டுவதில் உலகத்தில் உள்ள மக்களுக்கு இளைத்தவர்கள் அல்லர். ஏனென்றால் இன்னும் நமது கிராமப்புறங்களில் பலன் கொடுக்காத கால்நடைகளைக் கூட அன்றாடம் மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு போய் மாலையில் அவற்றை வீட்டுக்கு அழைத்து வந்து எல்லையற்ற அன்பை அந்த கால்நடைகளின் பேரில் செலுத்தி அன்பைப் பொழியும் இந்த மக்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு. இப்படிப்பட்ட மக்களைத் தான் காந்தியடிகளும் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் உதாரணமானவர்கள் என்று கூறினார்.


2. இம்மடலை சமர்பிக்கும் தி.ப.சாந்தசீலன் ஆகிய அடியேனுக்கும் வறுமை நிலையிலும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் இம்மக்கள் தான் கடவுளாகக் காட்சியளிக்கிறார்கள்.


3. பலன் கொடுக்காத மாடுகளை வைத்துப் பராமரிப்பவர்களின் கணக்கை இரகசியமாக எடுத்து அவர்களுக்கு அதிகப்படியான உதவித் தொகை, பரிசுத்தொகை, ஊக்கத்தொகை மாதந்தோறும் உடனடியாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.


4. தமிழ் நாட்டில் மூன்று சித்த மருத்துவக்கல்லூரிகள் அரசாங்கத்தால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தச் சித்த மருத்துவக் கல்லூரிகளை அணுகி சித்த மருத்துவத்தில் காராம் பசுவின் பால் உயர்வாகக் கூறப்படுகிறது. வெண்மைப் பசுவின் பால் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது, இரவில் சுரந்து காலையில் கறக்கும் பால் உயர்வாகக் கூறப்பட்டுகிறது. மேலும் கோரோஜனம், நெய், தயிர், பால், மோர், இவற்றின் அருமைப்பெருமைகளைப் பொது மக்கள் நடுவில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். இதனால் பால் பொருட்களின் நுகர்வுத் தன்மை அதிகப்படும். நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்த பால் பொருட்களின் நுட்பமான விசயங்கள் மக்களுக்கு புரியவரும்.


5. 100 ஏக்கருக்குக் குறையாமல் உள்ள பகுதியில் கோசாலை அமைக்கப்பட வேண்டும். கோசாலையில் கொண்டு வந்து விடப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் விரும்பினால் மாடுகளை அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். இதர கால்நடைகள் இறக்கும் போது விஞ்ஞானமுறைப்படி, தோல், எலும்பு, மற்ற பாகங்களை மீண்டும் உபயோகமான பொருட்களாக மாற்ற மிகச்சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த கால்நடைவல்லுனர்களைக் கொண்டு இந்தக் கோசாலை நிர்வகிக்கப் படவேண்டும்.


6. பொதுவாகவே பசுந்தீவனம் என்பது காணாத பொருளாகிவிட்டது. நகர்ப்புறக் கழிவுநீரைக் கொண்டு பசுந்தீவனம் வளர்க்கும் முறை மிகச்சிறப்பாக புதுச்சேரி மாநிலத்தில் விமானதளம் அருகில் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. ஆகவே புதுச்சேரி மற்ற பகுதிகளிலும் இது போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதிகப்படியான பசுந்தீவனம் உற்பத்திச் செய்யப்பட்டு மிக அதிக அளவில் கால்நடைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.


இப்படிப்பட்ட பசுந்தீவனங்கள் நம் மரபு வழியாக இருப்பது முக்கியம் . இவற்றை நம்மால் உருவாக்கப்படும் இயற்கை காடுகளில் இருந்து மட்டுமே பெற முடியும். அதாவது புல்லின் வகைகள் அருகம் புல்வகைகள் அம்மான் பச்சரிசி வகைகள் இன்னும் எண்ணற்ற விலங்கினங்கள் உண்ணும் தாவர இனங்களையே மரபு வழி பசுந்தீவனம் எனப்படும்.


7. நகர்புறத்தில் உழைக்கப் பயன்படுத்தும் மாடுகள் பொதுவாக கிராமப்புறங்களில் உழைக்கப் பயன்படுத்தும் மாடுகள் வயது முதிர்ந்து தள்ளாத நிலைமையில் இருந்தால் அவற்றை உடனடியாக கைப்பற்றி கோசாலையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட கோசாலைகள் தமிழ் நாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் பழந்தமிழ் நூல்களில் உண்டு. கோசாலைகள் அமைப்பதன் மூலம் நமது நாட்டின் பெருமை உலக அளவில் உயரும்.


மிக மோசமான சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டு ஆட்சி செய்பவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் மன நிறைவு உண்டாகும் மேலும், ஓங்கோல், மணப்பாறை, மேற்கத்தியான், காங்கேயம், தார்பக்கார், சிந்தி, போன்ற மிகச் சிறந்த இனங்கள் நமக்கு அழியாமல் தொடர்ந்து கிடைக்கும். தற்போது ஏறு தழுவுதல் விளையாட்டில் மட்டுமே இது போன்ற இனங்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. (ஜல்லிக்கட்டு) இந்த விளையாட்டை நம் புதுச்சேரி பகுதிகளிலும் ஊக்கப்படுத்த வேண்டிய ஏற்பாடுகள் செய்வதானது இப்படிப்பட்ட இனங்கள் தொடர்ந்து அழியாமல் வளர்வதற்கு ஊக்கமாய் அமையும்.


கோசாலை அமைப்பதானது வேளாண்மைக்கு மிக மிக உறுதுணையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. ஆகவே இந்த மடலில் உள்ள காரியங்களை நிறைவேற்ற வேண்டுமாய் தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


எழுத்து மூலமான பதில் அளித்தாலும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் எம்முடைய எந்தச் செய்திகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அனுப்பப்படுவதில்லை. அதிக அதிகாரம் படைத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் மட்டுமே இது அனுப்பப்படுகிறது. ஏனெனில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அனுப்புவது, பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் ஒன்றே என்று யாம் கருதுகிறோம்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இப்படிப்பட்ட கடிதங்களால் கருத்து வேறுபாடு அதிகமாகும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அதிகாரப் பகிர்வில் ஒரு சுமூகமான உறவு ஏற்பட்டு இரண்டு இயக்கங்களுக்கும் நல்ல சுமூகமாக உறவு ஏற்படும் போது இது போன்ற கடிதங்களை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் யாம் அனுப்ப முயல்வோம்.


25 வருடங்கள் தன்னலமற்ற தொண்டின் வெளிப்பாடு பல தமிழ் அறிஞர்களின் அறிவுச்சாரம் இக்கடிதத்தில் உள்ளதைத் தாங்கள் அருள் கூர்ந்து தெரிந்து கொள்ளவும். தங்களுக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இதிலுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய முயற்சி செய்தால் நாடும் தாங்களும் நல்வாழ்வு வாழ்வது உறுதி.

Friday, July 11, 2008

வேளாண்மை பற்றிய என் எண்ணங்கள்...

அடியேன் காங்கிரசில் உறுப்பினர் அல்லாத காங்கிரசுகாரன். எந்தக் கட்சியிலும் சாராதவன் காங்கிரசு கட்சி பலம் பெற்றால் இந்தியாவும், உலகeளவு பலம், வளம் பெறும். இது புதுவை மாநில நலன் கருதி எழுதப்பட்டது. இதில் உள்ள கருத்துக்கள் பலவும் இந்தியத் திருநாட்டிற்கும் பொருந்தும். எம்மைச் சோனியா தலைமையிலான காங்கிரசுகாரர்கள் பயன்படுத்தவும், செம்மைப்படுத்தவும் வேண்டுகிறேன்.

இந்த மடல் நாட்டு நலனைக் கருதி எழுதப்படுவது. இந்த மடல் எந்த ஒரு விளம்பர சாதனங்களுக்கும் அனுப்பப்படுவது அல்ல. புலன் அடக்கத்தையும் ஒழுக்கத்தையும் விரும்பி, காந்தியடிகள் 1933ஆம் ஆண்டே காங்கிரசுகட்சியில் உறுப்பினராவதை நிறுத்தித் தன்னைக் கட்சிசாரா பொதுமனிதராக அறிவித்தார். மேலும் அவர் 1947ல் நடந்த தன்னுரிமைத்திருநாளிலும் கலந்து கொள்ளாதவர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்து இந்த மடலைச் சமர்ப்பிக்கிறேன்.


காந்தி அடிகளின் வேளாண்மை சார்ந்த கருத்து :

1. நகரங்களில் உண்மை இந்தியாவைக் காணமுடியாது. இங்குள்ள எண்ணற்ற கிராமங்களில்தான் அது இருக்கிறது.


2. கிராமங்களில் இருந்துதான் நகரங்கள் பலமும் வாழ்வும் பெறுகின்றன. அந்தக் கிராமங்களைச் சுயநலத்திற்காகச் சுரண்டுவதற்கு நகரங்கள் விரும்பக் கூடாது. அதற்குப் பதிலாக, அந்தக் கிராமங்களுக்குப் போதுமான அளவுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும். அப்போது தான் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே உள்ள நல்ல தார்மீக உறவு வளரும். இந்தச் சமூகப் புணரமைப்பானது மாபெரும் பணி. (பக் 138 கிராம சுயராஜ்யம்).


3. இந்திய விவசாயியைப் பொறுத்தவரை அவர் உடம்பு கரடு, முரடானதாக இருக்கலாம் ஆனால் அதற்குள் சந்ததி சந்ததியாக வந்த ஒரு கலாச்சாரம் மறைந்திருக்கிறது. மேலே தெரியும் இந்தக் காட்டை அகற்றி விடுங்கள். அவருடைய ஏழ்மையையும் அறியாமையையும் போக்கி விடுங்கள். அப்போது கலாச்சாரம் பொருந்திய பண்பட்ட சுதந்திரமான குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த முன் உதாரணமாக அவன் திகழ்வதைக் காண்பீர்கள். (பக்152. கிராம சுயராஜ்யம். மதுரை காந்தீய இலக்கியச் சங்கம் வெளியீடு.)


4. எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால் கவர்னர்களும், மந்திரிகளும் விவசாயிகளின் மத்தியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாத நாணயமும், நாட்டுப்பற்றும் நாளுக்கு நாள் உண்டாகும். விஞ்ஞான வளர்ச்சியை நடைமுறையில் கொண்டு வரும் ஆற்றல் பெற்றிருந்தாலே போதுமானது.


5. ஒவ்வொரு கிராமங்களையும் அழகு மிக்கவை யாக்குவதே என்முதல் வேலை.


6. நீங்கள் இந்திய விவசாயிகளிடமும், அவர்கள் உங்களிடமும் பேச ஆரம்பித்தவுடன் அவர்கள் வாக்கில் விவேகம் நிறைந்திருப்பதைக் காண்பீர். வெளிக்கு அவர்கள் கரடு முரடாகத் தோன்றினாலும் உள்ளே ஆன்மீகக் களஞ்சியமாக விளங்குவதைக் காண்பீர்கள் இதைத்தான் நான் கலாச்சாரம் என்று கூறுகிறேன்.


7. இவ்வாறெல்லாம் கிராமத்தைப்பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் காந்தியடிகள் கூறி இருந்தார். ""எவ்வளவுதான் ஒருவன் சீர்கெட்டுப் போயிருந்தாலும் திறமையுடனும் மனிதாபிமானத்துடனும் முயற்சி செய்தால் அவனைத் திருத்தி விட முடியும் என நம்ப வேண்டும். மனிதர்களிடமுள்ள நல்லெண்ணத்தைத் தூண்டி அதற்குரிய பிரதிபலன் கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டும்.'' என்கிற காந்தி அடிகளின் கொள்கையில் எமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் புதுவையிலும், வேளாண்மை வெற்றி பெற, காந்தீயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட எமது கருத்துக்கள் பின்வருமாறு:


1. வேளாண்மை வளம் பெற்றால் தான் கிராமங்கள் வளம் பெறமுடியும். கிராமவளத்தில்தான் நாட்டின் வளம் உள்ளது. வேளாண்மை வளர்ந்தால்தான் நாடுவளரும், என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.


2. உழவர்களுக்கு இலவச மின்சாரம், மானியங்கள், கடன் உதவிகள், இலவச இடுபொருட்கள் எல்லாம் வழங்க வேண்டியது மிகமிக அவசியமே ஆனால் அதைவிட அத்தியாவசியம். இயற்கையாக வேளாண்மை செய்வதில் ஒரு மிகச்சிறு விவசாயி தன்னிறைவாகி இலாபம் பெற்றுத் தமது வாழ்க்கையை ஒரு நியாயமான முறையில் நடத்துவதற்கு அவர்களைத் தயார் செய்வதாகும்.


3. பண்ணை நிலம் என்றும், மருதநிலம் என்றும், வயல்வெளி என்றும் நஞ்சை நிலங்களை நம் பழந்தமிழர்கள் அழைத்து வந்தார்கள். கீழே உள்ள பாடல் கந்தர் அலங்காரம்; அருணகிரிநாதர் இயற்றியது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் என்கின்ற திருக்கோயிலைப் பற்றியப்பாடல் இது.


இந்தப் பாடல் மூலம் நெல்வயலில் மீன்கள் வளர்க்கலாம். மீன்கள் இருக்கும் நெல்வயலில் தண்ணீரும் நிறைந்து நிற்கும் என்பதை நன்கு உணரலாம்; மேலும் முருகக்கடவுள் பெருமைபற்றியும் கடப்பமலர் அருமைபற்றியும் இந்தப்பாடலால் அறியலாம்.


"சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையயழுத்தே.


மற்றும் கீழ்க் கண்ட பாடலால் மதுரைப் பகுதியில் விரிந்த பண்ணை நிலங்கள் இருந்ததையும் மதுரை மாநகரில் சிறந்த கட்டடங்கள் இருந்ததையும், கடப்பமரங்கள் அதிகம் இருந்ததையும், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்மூலம் அறியலாம். அது பின்வருமாறு :


"விண்ணொளிக்கும் சுடர்விமானமும்,பரனாத வெளியில் தாத சாந்தவீடும்கடம்பு பொதி காடும் தடம்பனைவிரிந்த தமிழ் நாடும்''.


மற்றும் நல்ல நன்செய்ய நிலம் எப்படி இருந்தது என்பதைக் கீழ்க் கண்ட கம்பராமாயணப் பாடல் மூலம் நாம் அறியலாம். இந்தப் பாடல் நஞ்சை (மருதம்) நிலம் மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் அடங்கிய நீர் நிலைகளோடு சிறப்பாக இருந்ததை விளக்கும்.


"தண்டலை மயில் களாட தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழுவின்ஏங்ககுவளைகண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டதேம்பிழி மதுரயாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ''


பொதுவாக பழந்தமிழர்கள் நெல்விளையும் நஞ்சை நிலங்களைத் தம் உயிரினும் மேலாக மதித்து வந்தனர். இதற்குக் காரணம் அதிக அளவு திண்பண்டங்களை அரிசியில் செய்யும் பழக்கம் இருந்து வந்தது. மனக்கத்தை அரிசி புட்டுக்கும், பச்சையாக சாப்பிடுவதற்கும், அதே போல் குள்ளக்கார், மோசனக்கார், பிசினிக்கார் போன்ற கார்வகை அரிசிகள், இட்லி, தோசை செய்வதற்கும், மற்றும் கார்த்திகை சம்பா, குதிரைவால் சம்பா, செங்கல்பட்டு என்ற குண்டுச் சிறுமணி போன்றவை சோறு ஆக்கவும் கஞ்சி காச்சவும், அப்ப வகைகளாகச் சமைத்து உண்பதற்கும், சீரகச் சம்பா, நெய் கிச்சடி, மிளகுச் சம்பா போன்ற வகைகள், பால்வகை அன்னங்கள் செய்வதற்குப் பயன்பட்டு வந்தன.


இப்படிப்பட்ட தானியங்களை உற்பத்தி செய்யக் கூடிய நிலங்களைத்தான் நஞ்சை நிலம் என்று கூறுவார்கள்.இந்த நஞ்சை நிலங்களில் எப்பொழுதும் தண்ணீர் நிறைந்திருக்கும். மழைக் காலங்களில் ஆறுமாதத்திற்குத் தண்ணீர் தானாகவே குளங்களில் இருந்து வெளியே வந்து பாயும். இப்படிப்பட்ட நிலங்கள் புதுவையில் நிறைந்து இருந்தன. ஆனால் தற்போது கிடையாது. இப்படிப்பட்ட நிலங்களால் புதுவை மக்கள் பசிதீர இன்பத்தோடு சோறு மணக்க மணக்க உண்டு மகிழ்ந்து வந்தார்கள். தேவைக்காகவும் வசதிக்காகவும் பண்டமாற்று முறைக்காகவும், தானியங்களை உற்பத்தி செய்தார்கள்.


நகர்ப்புறத்தில் இன்றுள்ள நிலைமைவேறு, அதாவது நகரவாசிகளில் பாதிபேர்களுக்கு மேல் பலவித நோய்க் காரணமாக அரிசி தானியத்தையே உண்ணமுடியாது.தற்போது நெல் உற்பத்தி செய்வது இலாப நோக்கத்திற்கே தவிர அதை வைத்து உண்பதற்காக அல்ல. நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி ஏரிகளைப் பராமரிப்புச் செய்யாமல், மூன்று போகமும் விளைந்த நிலங்களை ஒரு போகம் கூட விளைவிக்க முடியாத நிலங்களாக மாற்றி அதில் மூன்று போகமும் பயிர் செய்து நிலத்தையே வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இல்லாத நஞ்சை நிலங்களைக் காண்போம் என்று ஒரு பிரிவினரும், அரசு இயக்கமோ, கொஞ்சமுள்ள நஞ்சையையும் விட்டுவைக்கப் போவதில்லை என்ற போராட்டமும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆதலால் புதுச்சேரியில் உள்ள நஞ்சை நிலங்களைக் கீழ்க்கண்ட சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது எமது கருத்து.

அது பின்வருமாறு :

1. நஞ்சை நிலங்கள் ஏரித்தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வேளாண்மை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.


2. தண்ணீர் மட்டம் 50 அடிக்கு மேலே உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை ஒரு போக வேளாண்மைக்கு மட்டும் அனுமதிக்கலாம்.


3. 50 அடிக்குக் கீழே தண்ணீர் மட்டம் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை, கரும்பு, வாழை, நெல் நீங்கலாக மிகத் தண்ணீர் குறைவாகச் செலவாகும் இதர வேளாண்மைப் பயிர் செய்ய அனுமதிக்கலாம்.


4. புதுவையில் வேளாண்மை இடங்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகின்றன. வேளாண்மைத்தினக் கூலித் தொழிலாளிகளைப் பற்றி எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உண்மையில் நஞ்செய் நிலங்களுக்கு உண்மைச் சொந்தக்காரர் அவர்களே. மிகுந்த துயரத்தில் உள்ள அவர்களுக்கு வேளாண்மை இடங்கள் கைமாறும் பொழுது நிலப்பதிவின் போது நிர்ணயம் செய்த ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து உடனடியாக, சுனாமி நிவாரண நிதிபோன்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


5. தற்போது உள்e நஞ்சை நிலங்களை விட இந்தப் பூமிக்குத் தேவையானது இயற்கைக் காடுகளே. புதிய நீர் நிலைகளே; ஆதலால் விவசாயிகள் நியாயமான விரும்பும் விலையைக் கொடுத்து நகர்புறத்தைச் சுற்றியுள்ள வேளாண்மை இடங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாங்கி அவற்றில் புதிய நீர்நிலைகளை உருவாக்குவதிலும், இயற்கைகாடுகள் உருவாக்குவதிலும் மட்டுமே செய்யப்படுத்தப்பட வேண்டும்.


6. "தற்போது உள்ள நாட்டின் நிலைமைக்கு இது இன்றியமையாதது. எந்தவிதமான பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் எழுதப்படும் இந்த மடலை நன்கு அறிந்து செயல்படுத்த முயற்சிக்கவும். இந்த மடலைச் சமர்ப்பிக்கும். தி.ப. சாந்தசீலன் ஆகிய யாம் உங்கள் நண்பன், உங்கள் அன்பன் என்பதை நன்கு தெரிந்து கொள்ளவும்''.


7. உழவர்களுக்கு : உழவர்கள் என்பது சிறு விவசாயிகளைக் குறிக்கும். உழவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குரிய சந்தை விலை உலக சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். உதாரணமாக இங்கே ரூ.10/- முதல் ரூ. 20/- வரை விற்கப்படும் அரிசி வெளிநாடுகளில் ரூ.50/- முதல் ரூ.200/- வரை விற்கப்படுகிறது.


அரும்பொருட்களான அதாவது உலகமக்களுக்குத் தேவைப்படும் அறியபொருட்களான வெண்டை, புடலை, மாதுளம், இளநீர் போன்ற பொருட்கள் உலக சந்தையை விட, பத்து முதல் இருபது மடங்கு குறைவாக விற்கப்படுகின்றன. இதை மாற்றி உலகளவில் நல்லவிலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். அதே சமயத்தில் தற்போதுள்ள நிலையில் நம் நாட்டில் வேளாண்விளைப் பொருட்களின் விலை உயர்வால் உள்நாட்டு மக்கள் பாதிக்கப்படாதவாறு வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நாட்டிவ் உள்ள இதர வறியவர்களுக்கும் நுகர்வுத் தன்மை பாதிக்கப்படாத வகையில் வேண்டிய ஏற்பாடுகள் இலவச உதவிகள் மூலமோ மற்றவழி வகைகள் மூலமோ செய்யப்பட வேண்டும்.


பொதுவாக உள்நாட்டு வேளாண் உற்பத்திப் பொருட்கள் உலக சந்தையில் நல்ல அளவிற்கு விற்கப்பட்டால் ஒழிய வேளாண்மையில் வெற்றி காண்பது கடினமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னும், தற்போதும் வேளாண் விளைபொருட்களுக்கு (தக்காளி, வாழைக்காய்) சந்தை விலை மிகமிகக் குறைவாக இருந்ததால் லோடு கணக்கில் தக்காளியையும் வாழையையும் விவசாயிகள் சாலையில் வீசி விட்டுச் சென்றார்கள். கோவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொழுதும் சாலையில் வீசாமல் வயிற்றெரிச்சலோடு வேளாண்மை விற்பனைப் பொருட்களை மிகமிகக் குறைந்த விலையில், வேறுவழி இல்லாமல் விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


8. எவ்வளவு நீர்வளம் இருந்தாலும் காவிரியில் 365 நாட்களும் 24 மணிநேரமும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தாலும் எவ்வளவு உதவிகளை அரச் செய்தாலும் ஆட்சியாளர்கள் அதற்கு ஏற்பாடுகள் செய்தாலும் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய சந்தைவிலை கிடைக்கவில்லையென்றால் எல்லோருடைய முயற்சியும் பாழாகி வேளாண்மை மீள முடியாத துயரில் இருப்பது மட்டுமே மிஞ்சும்.


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கடலில் கிடைக்கும். பெரிய இறால் தற்போது விற்கப்படும் சாதாரண மீன்கள் விலையை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் தற்போது சாதாரண மீன்கள் விலையை விட மிக அதிக விலை பெரிய இறால்களுக்குக் கிடைக்கிறது.


முந்திரி விவசாயியின் நிலைமையும் இதேதான் சுமார் 40 வருடங்களுக்கு முன் முந்திரி விளைந்ததே தவிர வேளாண்மை செய்யப்படவில்லை. முந்திரி விவசாயிகள் அதை விற்பனை செய்வதற்கு வசதி படைத்தவர்களின் வீடுகளின் முன் பிச்சைக் காரர்களைப்போல யாசித்து, கெஞ்சி முந்திரிப் பயிர்களை விற்பனை செய்வார்கள். அவர்களின் நிலைமையும் மிகுந்த வறுமை நிலையில் இருக்கும்.

முந்திரியின் அருமை உலக அளவில் உணரப்பட்டு அது ஏற்றுமதி ஆன பிறகுதான் முந்திரி விளைச்சல் வேளாண்மையாக மாறி, அதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். அதே போல் வாழை, இளநீர், பனைநுங்கு, பனங்கிழங்கு, முருங்கைப்பூ, அத்திக்காய், அத்திமது, பனைமது, இவற்றின் அருமைகளை உலகளவில் உணரச் செய்து நம்நாட்டின் நாணய மதிப்பை வியக்கத்தகு வகையில் உயர்த்தலாம்.


9. நம் நாட்டிற்கு உள்ள மிக முக்கியமான பிரச்சனையே இதுதான். வேளாண்மையிலும் பால் உற்பத்தியிலும் நம் மரபுவழிப்படி வெற்றி காண்பது எப்படி என்பதைப் பற்றிய பலதுறைகளைச் சார்ந்த வல்லுநர்களை ஒன்று கூட்டி அழைத்துக் கலந்து ஆலோசனை செய்து முடிவுசெய்ய வேண்டும்.


10. கல்வி, மருத்துவம், வணிகமயமாக்கப்படாமல் சேவை அடிப்படையில் இருக்க வேண்டும். நீதி எளிய முறையில் கிடைக்க வேண்டும் இப்படி இருந்தால்தான் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கிவரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். முறையற்ற குடியிருப்புப் பகுதிகள் நகர்ப்புறங்களில் இல்லாமல் போகும். மிகச்சரியான புள்ளி விவரத்தோடு நிலங்களை ஆராய்ந்தாலும் அல்லது ஆகாய விமானத்தில் சென்று தமிழகம், புதுவை என்று பாகுபாடு இல்லாமல் பார்த்தாலும் புதுவையைச் சுற்றியுள்ள நகர்ப்புற வளர்ச்சி மிகமிகக் குறைவு என்பதும், வேளாண்மை இடங்களும் காடுகளும், ஏரிகளும் மிக, மிகஅதிகம் என்பதும் வெகுவாகப் புலப்படும்.


ஆகவே நாம் ஆற்ற வேண்டிய கடமை நிலப்பரப்பில் மிக உன்னதமானதாகும். அதாவது புதுவை மாநிலத்தை ஒட்டியது போல் உள்e நிலப்பரப்பைத் தத்து எடுத்து அல்லது புதுவையுடன் சேர்த்து (அ) நீண்டகால குத்தகை எடுத்து வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கி இர்ரி, அம்பா சமுத்திரம், ஆடுதுறை, பெரியகுளம், வேப்பங்குளம், காசரக்கோடு போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் தன்னலமற்ற சேவையை உலகத்திற்கு அர்ப்பணித்து வருவது போல் புதுவையிலும் நிகழ ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆகவே புதுவையின் அரசியல் அன்பர்கள் கிராமப்புற வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். கிராமங்களில் மிகச் சுலபமாகவும் சுகமாகவும் மக்கள் வசிக்கக் கூடிய நிலையை உருவாக்குவதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நகர்ப்புற நெரிசல் குறையும்.

மேலும் வாழை, தென்னை, பழவகைகள், தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்குத் தனித்தனியே ஆராய்ச்சி நிலையங்கள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இந்த ஆராய்ச்சி நிலையங்கள் மரபுவழி வழிமுறையை பின்பற்றி உருவாக்கப்பட வேண்டும். இத்துடன் இந்த மடலை நிறைவு செய்கிறோம்.

Thursday, July 10, 2008

என் எளிய வாழ்க்கையும் நோக்கமும்...

அன்புடையீர் ! வணக்கம். எமது பெயர் தி.ப.சாந்தசீலன்.
காந்திஅடிகள் 1933 ஆண்டே கட்சிசாரா பொது மனிதராக மாறினார் என்றும், அவர் 1947 ஆகஸ்டு 15இல் நடைபெற்ற தன்னுரிமைத் திருநாள் விழாவில் கலந்துகொள்ள வில்லை என்றும் அறிந்து அவருடைய கொள்கையை இயன்ற வழிகளில் பின்பற்றி, மக்களிடையே பரப்பி வருவது எமது வழக்கம்.

ஒரு நாட்டுக்குரிய மொழி வளர்ந்தால்தான் அந்த நாடு வளரும் என்ற காந்தியக்கொள்கையை நன்கு தெரிந்து தமிழையும், தமிழிசையையும் வளர்த்து வருவது எமது வழக்கம்.

கீழ்கண்ட நாட்டுப் பணிகளுக்குத் தங்கள் ஆதரவுடனும், ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் செய்ய விரும்புகிறேன். அவை பின்வருமாறு :

1. தமிழ்மொழி வeர்ச்சியிலும், தமிழிசையிலும் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும், தனிநபர்களுக்கும், உதவி செய்வது.

2. வழிபாட்டுத் தளங்களில் ( கோயில்களில் ) அரசு, வேம்பு, மலைவேம்பு, இலந்தை, எட்டி, அத்தி, மகுடம், வில்வம், விளா, இளுப்பை, நாவல், கொன்றை, வன்னி, பின்னை போன்ற மரபுவழி மரங்களை முற்றிலும் எமது செலவில் கூண்டு அமைந்து நடவு செய்து கொடுப்பது.

3. பனைமரம், தென்னைமரம், முருங்கைமரம், வேப்பமரம் இந்த ஐந்து மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களின் உயர்ந்த தரத்தை தமிழகத்தை உணரச்செய்து உலகளவில் அதை விற்பனை செய்து மானத்தோடும், கவுரவத்தோடும், உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களை வறுமையில் இருந்து மீட்பது.

4. சிலம்பு விளையாட்டுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது.

5. பம்பை, உடுக்கை வாசிப்பதில் தேர்ந்த கலைஞர்களுக்குப் போட்டி நடத்தி அவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பது.

6. இசை இசைத்துக்கொண்டே நடவு நடும்போட்டி நடத்தி வேளாண்மை தொழிலாளர்களுக்குப் பரிசளிப்பது. இது தொடர்பாக யாம் புதுவைப் பகுதியில் நடத்திய போட்டி பற்றி இந்து எழுதியுள்ளது.

7. சடுகுடு விளையாட்டுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தல்.

மேன்மை தாங்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள் எமக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் எம்மைத் தொலைபேசியிலும், நேரிலும் அணுகலாம்.

தங்கள் பகுதிக்கு அழைத்தாலும் நான் வருவேன்.

அன்புடன்
தி.ப.சாந்தசீலன்
22, உடையார் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி - 605 008.
பேசி: 0143 - 2251370 0143 - 49518

""பிறந்த நாடே சிறந்த கோயில்!
பேசும் மொழியே தெய்வம்''"

"நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை'' (ஒளவைப் பிராட்டி)

ஏரிகள் பாதுகாப்பு பற்றிய என் எண்ணங்கள்...

உலகின் முன்னேறவேண்டிய நாடுகள் உணரவேண்டிய புதுவையின் நீராதாரம். புதுவையின் மொத்த பரப்பeவு 432 ச.கி.மீட்டரில் 83 ஏரிகள் இருப்பது இந்தியாவிலேயே புதுவையில்தான்.

கிராம பஞ்சாயத்துகள் புதுவை பிரஞ்சு ஆட்சிக் காலத்தில் உயிரோட்டமாக இருந்ததினால்தான் ஏரிகள் மேம்படுத்தப்பட்டன. செம்மைப்படுத்தப்பட்டன. அவை சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இவ்வளவு குறைந்த பரப்பeவில் இவ்வளவு அதிகமான ஏரிகள் இருந்தும் கூட நம் அரசாங்கம் ஆட்சி, மக்கள் இந்த மூன்று இயக்கங்களும் செய்யும் தவறினால் புதுவையில் நிலத்தடி நீர் மாசுபட தொடங்கியிருக்கிறது. கடல் நீர் உள்ளே வர தொடங்கியிருக்கிறது.

கீழ்க்கண்ட காரியங்களை அதனால் புதுவை மாநிலத்தில் உடனே செய்ய வேண்டும்.

1. தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15,72,273 பேர். மொத்தப் பரப்பளவு 4.59,054 ஹெக்டர். புதுவையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பரப்பளவில் புதுவையை விட பல மடங்கு தூத்துக்குடி மாவட்டம் அதிகம். கட்டடங்கள் குறைவு கடலோர மணற்பரப்பு அதிகம் புதுவையை விட மக்கள் நெருக்கம் குறைவு ஆனால் சுமார் கடற்கரையிலிருந்து 10 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வெகுவாக நிலத்தடி நீரில் கலந்துள்ளது. வேளாண்மை செய்ய 30 அடிக்கு கீழ் உப்பு நீர்தான் கிடைக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் போதுமான நீர் நிலைகள் இல்லாதது தான். இதை மக்கள் பிரதிநிதிகள், அரசாங்கம் உணரவேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரிடமிருந்து எமக்கு வந்த கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்eது.

2. புதுவையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இல்லங்கள் அமைத்து அதில் சிறிய ஆழ்குழாய் அமைத்து சுத்தக் குடிநீரை பருகி இன்பமாய் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். சுமார் 65,00,000 மக்கள் வாழும் சென்னையில் புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் மக்கள் அங்கு வாழவே முடியாது என்ற மிகக் கொடூரமான, கேடுகெட்ட நிலமை உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு முக்கிய காரணம் என்ன ? சுமார் 1,600 சதுர கிலோ மீட்டர் உள்ள சென்னையில் ஏரிகளின் எண்ணிக்கை 5 முதல் 10 வரை இருக்கும். எமக்கு சரியாக புள்ளி விபரம் தெரியாது என்றாலும் சற்று ஏறக்குறைய நிலமை இதுதான்.

3. இந்த கருத்துக்களையெல்லாம் மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உணரவேண்டும். ""தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் சிந்தும் தேசம்''. ""தண்ணீர் மாசுபட்டால் காசுயிருந்தும் பயனில்லை.'' எப்பேர்பட்ட முயற்சி செய்தாகிலும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பைத் தடுப்போம் என்று பொதுமக்களுக்கு எழுதி வைத்திருக்கும் அரசுபல நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு அரசாங்கமே மூலகாரணமாகயிருக்கிறது. அதுவே ஆக்கிரமித்தும் உள்ளது. இன்று வரை புதுவையிலுள்ள90 சதவிகித ஏரிகளில் ஒன்று கூட சரிவர நிர்வாகம் செய்யப்படவில்லை. செப்பணிடப்படவில்லை. மேம்படுத்தப்படவில்லை.

4. இடம், பொருள், ஏவல், கூட்டுறவு, நட்பு, அனுபவம் என்ற தத்துவத்தின் கீழ் நம் முன்னோர்கள் மழைக்காலங்களில் நீரோட்டங்களை அறிந்தும். வெள்ளப்போக்கை அறிந்தும் மிக அருமையாக பல உன்னதமான ஏரிகளைஉருவாக்கினார்கள் பல குளங்களையும், குட்டைகளையும், தாங்கல்களையும், மடுவுகளையும் அற்புதமாக உருவாக்கியிருந்தார்கள்.

அதேபோல் நாமும் செயற்கைக்கோள் உதவியுடன், ஆகாயவிமான உதவியுடன், நவீன கேமராக்கள் உதவியுடன் மழைக்காலங்களில், வெள்ளக்காலங்களில் நீர்நிலைகளின் போக்கை அறிந்து எந்தெந்த இடங்களில் எல்லாம் புதிய நீர்நிலைகளை ஒரு சிலவற்றையாவது உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் தற்போது உள்ள நீர் நிலைகளை சிறந்த முறையில் நிர்வகித்து மேம்படுத்து ஆற்றல் நமக்கு உண்டாகும்.

5. தற்போது நாம் என்ன செய்கிறோம் என்றால் ஏரியை தூர் வார மட்டும் தெரிகிறது. எப்படி தூர் வார வேண்டும். எங்கு தூர் வார வேண்டும். எவ்வeவு ஆழத்தில் தூர் வார வேண்டும் அதில் மழைநீர் சேகரிப்பை எப்படி அமைக்க வேண்டும் என்பது தெரியவில்லை. நீர்வரத்து கால்வாய்களையும் ஒழுங்காக சீரமைக்கவும் தெரியவில்லை.

உதாரணமாக ஊசுட்டேரியில் நடக்கும் மிக மோசமான நிர்வாகப்பணிகளை இங்கே குறிப்பிடுகிறோம். சுமார் 15 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஊசுட்டேரியில் ஒழுங்காகத் துர்வாரப்படவில்லை ஊசுட்டேரி கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ள வெள்ளேரி, கடப்பேரி போன்றவைகளும் இது வரை செப்பனிடப்படவில்லை. ஊசுட்டேரியின் எல்லா மதகுகளும் நீர் ஒழுக்கு உடையவை இதுவரை நவீன திறப்பான்கள் பொருத்தப்படவேயில்லை. ஊசுட்டேரியில் தமிழகப்பகுதியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. அதை தடுக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊசுட்டேரி நீர் வரத்து கால்வாய்கள் மட்டம் பார்த்து தூர் வாரப்படுவதில்லை. ஒரு இடத்தில் உயரமாகவும் தூர் வாரப்படுகிறது. 63 ஏரிகள் இணைப்பு கொண்டது சங்கராபரணியாறு, மேல்மலையனூர் ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் மூலம் தான் ஊசுட்டேரி மற்ற ஏரிகளுக்குத் தண்ணீர் வருகிறது.

இந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் 60 வருடமாக அப்படியே இருக்கிறது. இது வரை அது உயரப்படுத்தப்படவில்லை. ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்eன. மழைக்காலங்களில் ஏரிக்கு அதிகப்படியான நீர் வரும்போது கூனிமுடக்குப் பகுதியில் கால்வாயில் தண்ணீர் வழிவதையும், காட்டேரிக்குப்பம் பகுதியில் கால்வாயில் ஆழத்தில் தண்ணீர் வருவதையும் இப்புகைப்படத்தில் நன்கு அறியலாம். இதன் மூலம் நீர்வரத்து வாய்கால் சரியான முறையில் தூர் வாரப்படவில்லை என்பதை நன்கு அறியலாம்.

இந்த ஒரு ஏரியிலேயே இவ்வளவு குறைபாடுகள் இருந்தால் மற்ற ஏரிகளில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இதை மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்கமும் நன்கு உணரவேண்டும்.

6. புதுவையில் எல்லா ஏரிகளையும் அளந்து அளவைக்கல் சுற்றிலும் நடவேண்டும். சிறிய குளங்கள், மடுவுகளைச் சுற்றி கருங்கல்லால் ஆன கரை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். கழிவு நீர் நீர்நிலைகளில் கலக்காமல் கடல் வரை செல்ல பிரத்தியோக ஏற்பாடு செய்யவேண்டும்.

7. கிராம பஞ்சாயத்துக்களுடன் இணைந்து அரசு, ஆட்சியாளர்கள் செயல்பட்டால் தான் முழு வெற்றியுடன் நீர் நிலைகளை நிர்வகிக்க முடியும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். புதுவையில் நீர் நிலைகளை அழியாமல் பாதுகாத்து கொடுத்ததே கிராம பஞ்சாயத்துகள்தான். அந்த கிராம பஞ்சாயத்துக்களை நாம் உதாசினப்படுத்துகிறோம். அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க மறுக்கிறோம். கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் கொடுத்தால்தான் மக்கள் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., மந்திரிகள். அரசாங்கம் முழு வெற்றியுடன் செயல்பட முடியும்.

இதற்கு உதாரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆட்சி முறைகளை நாம் நன்கு அறிய வேண்டும். இப்போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் கொடுத்தால் எம்.எல்.ஏ., மந்திரிகள், அரசாங்கத்திற்கு அதிகாரம் குறைந்துவிடும் என்று முற்றிலும் தவறாக நினைக்கிறார்கள்.

8. 10 பேருக்கு குறையாத தூதுக்குழு ஒன்றை அனுப்பி நல்ல முறையில் ஏரிகளை நீர்நிலை நிர்வாகிக்கும், அமெரிக்கா, பின்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, உட்பட 10 நாடுகளுக்கு குறையாமல் அங்குள்ள நவீன நீர்நிலை நிர்வாகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உலகத்திற்கே முன் உதாரணமான கல்லணை நீர் நிர்வாகத்தைப் பற்றியும் புதுவை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

புதுவை அரசு பெரும்பாலான கடிதங்களை ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்திலேயே தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதை தமிழில் அனுப்ப ஏற்பாடு செய்தால் தான் கிராம பஞ்சாயத்துக்கள் உயிரோட்டமுள்ள ஒரு ஜீவனாக மாறும். நிற்க.

9. இந்தக் கடிதங்களில் உள்ள பல கருத்துக்கள் தமிழகப் பகுதிக்கு பொருந்தும். அதனால் தமிழக அரசுக்கும், தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. எந்த பத்திரிக்கைகளுக்கோ, நாளிதழ்களுக்கோ இது அனுப்பப்படுவதில்லை.
அன்புடன் தி.ப.சாந்தசீலன் 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008.






இணைப்பு :
அனுப்புநர் : பெறுநர் திரு.எஸ். தர்மலிங்கம், எம்.ஏ.,
புள்ளி இயல் உதவி இயக்குநர் ( முகூபொ ) , தூத்துக்குடி மாவட்டம்.

கடித எண் : 621 / அ2 / 2007 - 1 நாள் : 27.09.2007 ஐயா, பொருள் : தகவல் உரிமைச் சட்டம் விவரங்கள் கேட்பது தொடர்பாக பார்வை : 1. தங்களது மனு நாள் இல்லை. 2. மாவட்ட ஆட்சி தலைவர் தூத்துக்குடி கடிதஎண் : ஓ.மு.எல் 01/71700/2007 நாள் : 14.09.2007 தங்களது மனுவில் கோரியுள்ள விவரங்களில் இவ்வலுவலகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கான 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்களைக் கீழ்க்கண்டுள்ளவாறு தெரிவித்துக் கொள்கிறேன். மொத்த மக்கள் தொகை - 1572273 இதில் ஆண்கள் - 766823, பெண்கள் - 805450 மொத்த பரப்பளவு - 459054 ஹெக்டேர். மேலும் தங்களது விண்ணப்பத்தில் கோரியுள்ள இதர விவரங்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.புள்ளி இயல் உதவி இயக்குநர் ( முகூபொ)தூத்துக்குடிநகல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாeர் ( பொது )தூத்துக்குடி.

வளர்க வையகம் ! வாழ்க தமிழ் !!
"பிறந்த நாடே சிறந்த கோயில்! பேசும் மொழியே தெய்வம்''

Tuesday, July 8, 2008

உருகும் மெழுகுகள்

மொழி வளர்வது, நீதி கிடைப்பது பற்றியது. இக்கடிதத்தை சமர்பிக்கும் எனதுபெயர் தி.ப. சாந்தசீலன், எம்மை காலை 9.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தொலைபேசியிலும்,நேரிலும் சந்திக்கலாம். எண்.22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008. என்ற விலாசத்தில் வழி, வழியாக யாம் வசித்து வருகிறோம்.

மது அருந்தாமை யோகாவை வளர்ப்பது, தமிழையும், தமிழிசையையும், மரபுவழி மரங்களையும் வளர்ப்பது எமது வழக்கம். காந்தியடிகள் 1933ஆம் ஆண்டே கட்சியிலிருந்து விலகி தன்னைக் கட்சி சாரா பொதுமனிதராக அறிவித்தார் என்பதையும் 1947ஆம் ஆண்டு நடந்த சுதந்திர வைபோகங்களில் கலந்து கொள்ளாதவர் என்பதையும் அறிந்தபின், உலகத்திற்கும், தமிழ் மண்ணுக்கும் தேவைப்படும் அவரது கருத்துக்களை மக்களிடையே பரப்புவதும் எமது வழக்கம்.

காந்தியடிகள் கூறினார் அப்பழுக்கற்ற ஜனநாயக நாட்டில் குற்றம் குறையற்ற நீதி அனைவருக்கும் சுலபமாக எளிதில் கிடைக்க வேண்டும். மேலும் அவர் தெளிவாக மக்களுக்கு விளக்கினார். கடந்த 50 வருடமாக நாம் நமது தாய்மொழியில் கல்வி கற்றிருப்போமேயானால் நமது அறிவினால் அண்டை அயலில் உள்eவர்கள் பயன் அடைந்து இருப்பார்கள், இந்தியாவும் தனது தேவைக்கேற்ற ஒரு சுய ஆட்சியை அனுபவித்துக்கொண்டிருக்கும். நம் நாட்டிலும் பலவிஞ்ஞானிகள் தோன்றி இருப்பார்கள். அவர்களது கண்டுபிடிப்பு நமது சொத்தாகி இருக்கும். கிராம பஞ்சாயத்துக்கள் விசே­ உயிருள்ள ஜீவனாகியிருக்கும். இந்த புனித பூமியில் திட்டமிட்டப் படுகொலைகள் நடக்காது இருந்து இருக்கும்.

பொதுவாக உருக்கமாக நாம் அறியவேண்டியது இது தான் அதாவது, தாய்மொழிக் கல்வி இல்லாததினால்தான் மனிதர்களுக்கு அறிவு குறைவு ஏற்பட்டுள்eது. ஆதலால்தான் மிகமிக மோசமான நிலையில் உள்ள நீதிக்கிடைக்காத சூழ்நிலையை எதிர்த்து அறப்போராட்டத்தில் கூட மக்கள் இறங்கவில்லை. இதனால் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

விரைவு நீதிமன்ற நீதிபதிகளாக பொதுமக்கள் பலர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு நம் சமுதாயம் சூட்டும் பெயர் ரவுடி, குண்டர், பிஸ்தா, போன்றவை. திருக்குறளில் உள்ள குறள் அதாவது, ""அறம் ஈனும், இன்பமும் ஈனும் - திறனறிந்து பிறர் தீதின்றிவந்த பொருள்''இக்குறளின் பொருள் பிறரைக் கெடுக்காமல் உழைப்பின்மூலம் வரக்கூடிய செல்வம்தான் நன்மையைத் தரும் என்பதாகும்.

காந்தியடிகளும் நாணயமில்லாத செல்வம் நாட்டிற்கே ஆபத்தையே விçeவிக்கும் என்று கூறினார். கொலை, கொள்ளை குற்றங்களைத் தவிர இதர வழக்குகளுக்காக காவல் துறையையோ, நீதித்துறையையோ மக்கள் அணுகும்போது வெளிப்படையாகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுசம்மந்தமாக (மிகு விரைவு நீதிமன்ற நீதிபதிகள்) ரவுடி, குண்டர்களை அணுகுங்கள் எங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்குச் சென்றால் பத்துவருடங்களாக ஆனாலும் நீதிகிடைக்காது.

இந்த நாட்டில் என்று வெளிப்படையாக சொல்லிவிடுவது மிகுந்த வழக்கமாக உள்ளது. இது ஊர் அறிந்த ரகசியமாகவும் உள்eது.மேற்படி குண்டர்கள் இதுபோன்ற வழக்குகளைத் தீர்க்க முற்படும்போது அவர்களுக்கு உழைப்பில்லாத செல்வம் பிறரைக்கெடுத்து வரக்கூடிய செல்வம் சுலபமாக அதிக அளவில் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடுகிறது. காந்தியடிகளும், வள்ளுவரும் குறிப்பிட்டதுபோல இந்த செல்வம் அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அழிக்கிறது. அவர்கள் மக்களுக்குச் செய்யும் நன்மை ஏராeம். பல குண்டர்களின் இல்லங்களின் சுப நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நன்றி விசுவாசத்தோடு மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொள்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

தங்கள் வாழ்வை அழிய விடச்செய்து கொண்டே நூற்றுக்கு தொண்ணூற் றைந்து சதவிகித குண்டர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றுகிறார்கள். ஆகவே இவர்கள் உருகும் மெழுகுகள். இவர்களுக்கு அடுத்தப்படியாக இருப்பவர்கள் இவர்களைக் கண்காணிக்கும் காவல்துறையினர் இவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றுதலில் முற்றிலும் வழிகாட்டுதல், இல்லாமை, தாங்கள் எடுத்துக்கொண்டவேலையில் உள்ள செயல்களைப் பாராமல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் கட்டுப்பாடின்மை போன்றவை இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இயற்கையாக வரும்.

ஆகவே இதுபோன்ற செயல் சூழலில் மீள முடியாமல் இவர்கள் உடலும், உள்ளமும் கெட்டு, குண்டர்கள் ஒரு மணிநேரத்தில் எரிந்து உருகுகிறார்கள் என்றால் இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள காவல் துறையில் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் இரண்டு மணிநேரத்தில் எரிந்து உருகுகிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக உள்ள அரசியல் தலைவர்கள் மூன்று மணி நேரத்தில் எரிந்து உருகுகிறார்கள். அதாவது வலுக்கட்டாயமாக சமுதாயத்தால் தீய சூழலில் ஈடுபடும் இவர்கeது வாழ்க்கை இவர்கள் ஏற்றுச்செய்யும் வேலையில் ஏற்படும் குற்றஅளவுகளுக்கு ஏற்ப இவர்களின் வாழ்வில் மிகுந்த தீமை ஏற்படுகிறது. இதுதான் எதார்த்தமான உண்மை.

இதற்கு தீர்வுதான் என்ன?
இதனுடைய தீர்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்குமுன் நாட்டில் இதன் பிரதிபலிப்பு என்ன? வறுமையையும் அறியாமையையும் முதலீடாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இவர்களின் இந்த நிலையால் அரசு இயந்திரங்களில் ஊடுருவியாய்ந்திருக்கும் இலஞ்சம், ஊழல், இதனால் நம் தமிழ்மண் உட்பட இந்தியா முழுவதுமே மீள முடியாத துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படி கூறுவதால் நாட்டில் நல்லவர்கள் இல்லை, நல்ல சக்தி இல்லை என்பது பொருளல்ல. நல்லவர்களும், நல்ல சக்திகளும் நடைமுறை நாட்டுநிர்வாகத்தில் வரமுடியாத சூழ்நிலை இருக்கிறது என்பது தான் பொருள்.

இதற்குத் தீர்வு தமிழ்மண்ணில் தமிழும் தெலுங்குமண்ணில் தெலுங்கும், அந்தந்த மாநிலத்திற்கு உரியமொழிகள் வளரவேண்டும். நீதி மிகவிரைவாக கிடைக்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது சம்மந்தமாக ஆலோசனை செய்ய வேண்டும். இதற்கு தீர்வு காண வேண்டும். இதுதான் இதற்கு சிறந்த நிரந்தர தீர்வு.

இல்லையயன்றால் மனுநீதி சோழனும், பாண்டிய மன்னன், பாண்டிய நெடுஞ்செழியனும் வாழ்ந்து நீதிக்கு புகழ் பெற்ற நம் தமிழ்நாட்டில் உள்e அனைவரும் வெட்கத்தோடு, வேதனையோடு ஒருபொய்யான வாழ்க்கையை வாழநேரிடும், நேரிட்டுக்கொண்டும் இருக்கிறது. ""நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை"' என்ற ஒeவைப்பிராட்டியின் கருத்துகூர்ந்து நோக்கத்தக்கது. அதுமட்டுமல்ல திட்டமிடப்படாத அரசனுடைய ஆட்சியில் பொருளில்லாத வறுமை நிலையும், துன்பமானதாகும். செல்வ நிலையும் அதைவிட துன்பமானதாகும்.

"இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின்'' என்ற திருக்குறளின்படி நம் தமிழ் மண்ணில் உள்ள அனைவரது வாழ்வும் துன்பநிலையையே உணர்த்திக்கொண்டு இருக்கும். எனவே தமிழை வeர்ப்போம், தரணியில் உயர்வோம். விரைவான நீதியை பெறுவோம், இன்பவாழ்வு வாழ்வோம்.

இந்தக் கடிதத்தை படிக்கும் அன்பர்கள், இதற்கு எழுத்து மூலமான பதிலை எமக்கு அனுப்பினால் உற்சாகமும், மகிழ்ச்சியும் உடையவனராவோம்.
நன்றி
அன்புடன் தி.ப. சாந்தசீலன்
குறிப்பு : இந்தக் கடிதம் எந்த நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி, விளம்பர சாதனங்களுக்கும் அனுப்பப்படுவதில்லை.

பழந்தமிழர் மற்றும் காந்தியடிகளார் கருதிய விடுதலை...

வளர்க வையகம்! வாழ்க தமிழ்!
பிறந்த நாடே சிறந்த கோயில்! பேசும் மொழியே தெய்வம் !

தற்போது தமிழ் மண்ணுக்கு இன்றியமையாமல் தேவைப்படும் விடுதலை!

காந்தியக் கொள்கையில் பற்றுள்ள எங்கள் அமைப்பு, தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்காகவும் பிரதிநிதிகளுக்காகவும் விடுக்கும் இந்த அன்பு வேண்டுகோளைத் தயவு கூர்ந்து முழுமையாகப் படிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்திய சுதந்திரத்திற்கு (1947) 13 ஆண்டுகளுக்கு முன் (1934) காந்தியடிகள், அடிப்படை காங்கிரசு உறுப்பினர் பதவியிலிருந்து விலகித் தன்னைக் கட்சி சாராப் பொதுமனிதனாக அறிவித்தார் (ஆதாரம் நூலின் பெயர் : இந்திய விடுதலைப் போர் வரலாற்றுச் சுருக்கம், வெளியீட்டாளர்கள் (1985) பூரம் பப்ளிகே­ன்ஸ் நெ.6, ஜம்புலிங்க நாயகர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34, நூலாசிரியர்கள் எஸ்.ஏ. ரஹீம், ஏ.கோபண்ணா).

காந்தியடிகளின் முயற்சியால் நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் அவருடைய கொள்கையில் முன்னரே மாறுபட்டிருந்த காங்கிரசில் உள்ள பெரும்பான்மை யானவர்கள் துர்அதிர்ஷ்டவசமாக இந்தியாவை ஆட்சி செய்ய நேரிட்டது. அதன் காரணமாகவே இன்று நம்நாடு மோசமான அரசியல் சூழ் நிலையில் சிக்கி வறுமையிலிருந்து மீளமுடியா நிலையிலுள்ளது.காந்தியடிகளின் மறைவுக்குப்பின் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் அரும் பொருளான அவருடைய அரசியல் கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படாமல் விடப்பட்டன. நல்ல நோக்கமில்லாதவர்களால் சுய லாபத்திற்காக அவருடைய தெய்வீக கருத்துக்கள் மட்டும் பரப்பப்ட்டு வந்தன. ஆனால் அவருடைய தேசிய கருத்துக்கள் முற்றிலும் ஒதுக்கப்பட்டன.

அவற்றில் சில பின்வருமாறு:

1. மத்திய அரசாங்கத்தில் இருபது பேர் அமர்ந்து கொண்டு உண்மையான ஜனநாயகம் செயல்படுமாறு செய்ய முடியாது. அது அடித்தளத்திலிருந்து ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த மக்களாலும் செயல்படுத்தப்பட வேண்டும்.கிராம சுயராஜ்யம், பக்கம் - 17 காந்தி இலக்கிய சங்கம், மதுரை.

2. இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்து விட்டது என்றாலும் இந்தியாவிலுள்e நகரங்கள், பட்டணங்கள் ஆகியவைகளுக்கு அப்பால்-இங்குள்e ஏழு இலட்சம் கிராமங்களின் சமூக, தார்மீக, பொருளாதார விடுதலையை நாம் அடைந்தாக வேண்டியிருக்கிறது.கிராம சுயராஜ்யம், பக்கம்-18 காந்தி இலக்கிய சங்கம், மதுரை.

3. நன்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு அரசில் அநியாயமான முறையில் பதவியையோ, சொத்தையோ கைப்பற்றிக் கொள்வது சாத்தியமில்லை. கிராம சுயராஜ்யம், பக்கம்-38. காந்தி இலக்கிய சங்கம், மதுரை.

4. இந்தியாவிலுள்ள கொடிய வறுமையையும் அதனால் ஏற்படக்கூடிய சோம்பேறித் தனத்தையும் தவிர்க்க முடியுமானால், மிகப்பெரிய இயந்திரங்களை உபயோகப் படுத்துவதையும் நான் வரவேற்பேன்.கிராம சுயராஜ்யம், பக்கம்-52. காந்தி இலக்கிய சங்கம், மதுரை, Young India, 22-11-1924,

5. ஏழையாக இருக்கும் இந்தியா சுதந்திரம் பெற முடியும் ஆனால் ஒழுக்கக்கேடான முறைகளின் மூலம் வeம் பெற்ற இந்தியா தனது •தந்திரத்தை மீண்டும் அடைவதென்பது மிகக் கடினமானதாகும்.கிராம சுயராஜ்யம், பக்கம்-60, Young India, 22-11-1926.

6. நகரங்களில் வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று கருதுகிறார்க¼ளா அவ்வeவு சுகமாகக் கிராம வாழ்க்கையும் இருக்கிற மாதிரி இந்தியாவிலுள்e கிராமங்கçeப் புனருத்தாரணம் செய்வது எப்படி? உண்மையில் ஒவ்வொரு தேசபக்தனின் கடமையும் அது தான்.கிராம சுயராஜ்யம், பக்கம்-65 காந்தி இலக்கிய சங்கம், மதுரை.Harijan Daily 7-3-1936

7. உண்மையில் ஒரு நாட்டில் ஒழுங்கு நிலவுகிறது என்பதற்கான உரைகல், அதில் எத்தனைக் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல அந்நாட்டு மக்களிடையே பட்டினி இல்லாமல் இருக்கிறதா என்பது தான்.கிராம சுயராஜ்யம், பக்கம்-74

8. படித்தவர்களாகிய நாம் ஒரு வெளிநாட்டு மொழிமூலமாகவே நம்முடைய கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இதனால் தான் பொது மக்கள் மத்தியில் எந்த விதமானபிரதிபலனையும் ஏற்படுத்த முடியவில்லை.கிராம சுயராஜ்யம், பக்கம்-103

9. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் நமது தாய்மொழி மூலம்கல்வி கற்றுக் கொண்டிருப்போமானால் நமக்கு மூத்தவர்களும் நமது வேலையாட்களும் நமது அண்டை அயலிலுள்eவர்களும் தமது அறிவினால் பலன் அடைந்திருப்பார்கள்.கிராம சுயராஜ்யம், பக்கம்-104

10. கல்வியின் எல்லாத்துறைகளுமே தாய்மொழியின் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால் அவை நம்முடைய வளத்தை வியப்பளிக்கக்கூடிய முறையில் உயர்த்தியிருக்கும் அநேகமாக இந்தியாவும் தனது தேவைகளுக்கு ஏற்ற ஒரு சுயாட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும்.கிராம சுயராஜ்யம், பக்கம்-104

11. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்களும் கீழ்க்கண்ட காரியங்கçeச் செய்ய வேண்டும்.
அ. கிராமத்திலுள்ள ஆண், பெண் கல்விஆ. கிராமத் துப்புரவு இ. கிராம வைத்திய வசதி ஈ. கிராம பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைப்புக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்.உ. ஆதி திராவிடர்களின் முன்னேற்றத்தையும் அவர்களுடைய அன்றாட தேவைகளையும் கவனித்தல் கிராம சுயராஜ்யம் பக்கம் 118 ,Young India, 28-05-1931.

12. சுதந்திரம் என்பது இந்திய மக்களின் சுதந்திரமாக இருக்க வேண்டும் இப்போது அவர்கள் மீது ஆட்சி நடத்துபவர்களுடைய சுதந்திரமாக இருக்கக் கூடாது.கிராம சுயராஜ்யம் பக்கம் 119, Harijan, 18-07-1949.

13. ஆங்கிலத்தின் மீது நமக்குள்e மயக்கம் நம்மை மாநில மொழிகளிடம் வி•வாசமற்றவர்களாக்கிவிட்டது இதற்கு ஒரு பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்பதற்காகவாகிலும் கிராம ஊழியர், கிராம வாசிகள் மத்தியில் தாய் மொழிப்பற்றை ஏற்படுத்த வேண்டும் அதே சமயம் இந்தியாவிலுள்e மற்ற எல்லா மொழிகள் மீதும் அவர் சமமான மதிப்பும் வைத்திருக்க வேண்டும்.கிராம சுயராஜ்யம் பக்கம் 311, Harijan 18-08-1940.

14. உடல் உழைப்பு நியதிக்குப் பணிவதானது சமுதாய அமைப்பில் ஒரு சத்தமில்லாத புரட்சியை ஏற்படுத்தி விடும் உயிர் வாழ்ப் போராடுவதற்குப் பதிலாக பரஸ்பரம் சேவை செய்வதற்கான போராட்டம் வரும் இதுவே மனிதன் அடையக் கூடிய வெற்றி, காட்டு மிராண்டிகளின் சட்டம் போய் மனிதனைப் பற்றிய சட்டம் அங்கு இடம் பெறும். கிராம சுயராஜ்யம் பக்கம், 90 Harijan,29-06-1935.

15. ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது என்பதற்கான முதல் உதாரணம் உடனடியாகவும் அதிக செலவின்றி மலிவாகவும் குற்றம் குறையற்ற நீதி கிடைக்க வேண்டும்.கிராம சுயராஜ்யம் பக்கம் -354.

மேற்சொன்ன கருத்துகளிலிருந்து காந்தியடிகள் நம் நாட்டை எவ்வாறு உருவாக்க வேண்டுமென்று விரும்பினார் என்பதை ஒருவாறு அறியலாம் அடிகளார் கூறிய கருத்துக்களை ஓரளவு நாம் அறியும் போது நம் ஒளவையார் கூறிய ( "நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றுமில்லை') (கொன்றை வேந்தன் பகுதி 49) என்கிற வார்த்தையின் சாரமே அடிகளாரின் கருத்துகளாகும் என்பது விளங்கும்!

ஆகவே தாய் மொழியில் தேர்ச்சி பெற்றுப் பழந்தமிழ் நூல்கçeக் கற்றறிந்து ஒழுகுவதும் காந்திய கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் ஒன்றேயாகும். தமிழக முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்ட அனைவருக்கும் நாங்கள் அறிந்த காந்தியக் கருத்துக்களின் சாராம்சத்தைப் பின்வருமாறு தெரிக்கிறோம்.காந்தியடிகள் இந்தியாவின் சுதந்திரத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவருடைய மேலே குறிப்பிட்டுள்ள 1,2ஆவது கருத்துக்கள் மூலம் நன்கறியலாம்.

நம்நாட்டின் தேர்தல் முறைகள் சட்டதிட்டங்கள் யாவும் இங்கிலாந்து அரசால் ஒரு அடிமைப்படுத்தப்பட்ட நாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டவையேயாகும் அதே தேர்தல் முறை சட்டதிட்டங்கள் நம்நாட்டில் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாமலாகிச் சுதந்திரம் என்பது காந்தியடிகள் மேலே 12ஆம்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல மக்களைஆட்சி செய்பவர்களுக்கே! மக்களுக்கில்லை என்பது போல் ஆகிவிட்டது.

மேலும் தற்பொழுது ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு அரசு இயக்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு (புதுவையில் ச.ம.உ, தமிழகத்தில் 102 நகர சபை தலைவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கிராம பஞ்சாயத்து பேரூராட்சி தலைவர்கள்)சுதந்திரம் இருப்பது உண்மை.

அவர்களால் எளிதாக அரசை அணுகி அரசு இயக்கத்தை, தங்களுடைய நியாயமான சுய தேவையை பூர்த்தி செய்து கொள்e பயன்படுத்திக் கொள்eலாம் என்பதும் உண்மை ஆனால் அவர்களுக்குத் தங்களுடைய மக்களுக்குச் சேவை செய்யப் போதுமான சுதந்திரமும் அதிகாரமும் சிறிதளவும் - கிடையாது என்பது யாவராலும் மறுக்க இயலாது என்பது தெளிவான உண்மை.

நம்நாட்டின் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் சட்ட திட்டங்களும் தேர்தல் முறையும் ஏற்படுத்தப்படாதவரையில் அதாவது மேலே குறிப்பிட்டுள்e தமிழ் மண்ணில் உள்ள மக்கள் பிரதி நிதிகளுக்குச் சிறந்த அலுவலகம் அமைத்து அதில் நவீன வசதி ஏற்படுத்தி, தாய் மொழியைத் தமிழ் மண்ணில் எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் எல்லா வகைகளிலும் எல்லா அரசு இயக்கங்களிலும் நடைமுறைக்குக் கொண்டு வந்து மக்கள் பிரதிநிதிகளுக்கு நீதி வழங்கும் அதிகாரத்தையும் கொடுக்கவேண்டும்.

அவர்களைஅங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களாக மாற்றி நிர்வாக நிதி வசத்தையும் நிர்வாக அதிகார அமைப்பையும் அவர்களுக்கு மிகச்சுதந்திரமாக அளித்தால் நம் தமிழ் மண் வியப்பளிக்கும் வகையில் உலகத்துக்கு உதாரணமாக அமையும். இல்லையயன்றால் எவ்வளவு நல்லவர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டாலும், மக்கள் தலைவர்களும் நாட்டு நிலைமையைக் கருதி வருந்தினாலும், அந்த வருத்தத்தால் ஏற்படும் போராட்டங்களாலும், மறியல்களாலும், உண்ணாவிரதத்தாலும், எந்த மாறுதலும் எப்போதும் ஏற்படாது என்பது திண்ணம்.

பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற வeர்ந்த நாடுகளில் அந்நாட்டுக்குத் தகுந்தாற்போன்ற சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுத் தாய்மொழிக்கு மிக உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்eது. அதிகாரம் பரவல் மயமாக்கப்பட்டு எல்லாப் பஞ்சாயத்துக்களுக்கும் கல்வி, சுகாதாரம் குழந்தைநலம், வைத்திய வசதி, மின்விநியோகம் போன்றவற்றிற்குக் கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் எல்லாப் பஞ்சாயத்துக்களுக்கும் தேவையைக் கருதி, போதுமான நிதியும் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக டென்மார்க், ஜெர்மனி, ஆஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அரசுகளிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய குறிப்பேடுகளும், புத்தகங்களும் எங்களிடம் உள்ளன. அதைப்பெற விரும்பும் அன்பர்கள் எங்கள் முகவரிக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மேற்சொன்ன நாடுகளில் நீதித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மட்டுமே மத்திய அரசாங்கத்தால் கவனிக்கப்படுகிறது. மற்ற துறைகள் யாவும் சிறந்த தனியார் அமைப்புகளிடம் மிகச் சுதந்திரமாக ஒப்படைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளால் நேரடியாகக் கவனிக்கப்படுகின்றன.

அதிர்ஷ்டவசமாக நம் தமிழ் நாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தில் பிரெஞ்சுகாரர்களால் மிகச் சுதந்திரமான மக்களாட்சி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்னரே புதுவையில் 12 மேயர்கள் நியமிக்கப்பட்டு எல்லோருக்கும் சமமான நிதியும், அதிகாரமும் அளிக்கப் பட்டிருந்தன. இதனாலேயே புதுச்சேரியில் பிறப்பு, இறப்புப் பதிவுகள் பஞ்சாயத்து அலுவலகங்களில் இன்றளவும் யாவருக்கும் உண்டு.

தமிழகத்தின் நூற்றில் ஒரு பகுதி கூட இல்லாத புதுவையில் 12 மேயர்கள் இருக்கும் போது தமிழகத்தில் அப்போது 3 மேயர்கள் மட்டுமே இருந்தார்கள். இதைக் கொண்டே தமிழகம் ஒரு அடிமை நாடாகவே நடத்தப்பட்டது என்பதை நன்கறியலாம். ஆனால் துரதிஷ்டவசமாக புதுவையின் பழமையான தேர்தல் முறைகள் மறைக்கப்பட்டு, இதுவரை பஞ்சாயத்துகளுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதுவையில் 12 மேயர்கள் இருந்த இடத்தில் தற்போது 30 மேயர்களாவது ஆக்கப்பட வேண்டும்.

ஆனால் புதுவை அரசோ 12 மேயர்களை 5 மேயர்களாகக் குறைத்து விட்டது (காரைக்கால், மாஹே, யானம்) உட்பட்.தாய்மொழித் தமிழில் புதுவை அரசு செயல்படவேண்டும்.

தமிழ்நாட்டில் முற்றிலுமாகத் தாய்மொழியில் அரசாங்கம் செயல்பட வேண்டும். பிறமொழிக்காரர்கள் தன்னிச்சையாக, பள்ளிகள் ஆரம்பிக்கவும், அவர்கள் மொழிகçeக் கற்றறிந்து கொள்ள வேண்டிய உதவிகள் செய்வதும் அவசியம். தமிழ் நாட்டிலுள்ள பஞ்சாயத்துக்களுக்கும் நகரசபைகளுக்கும் மற்றும் புதுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (ச.ம.உ.) சிறந்த அலுவலகங்கள் அமைத்து நவீன வசதியை ஏற்படுத்தித் தருவது மிகமிக இன்றிமையாதது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 102 நகரசபை தலைவர்களுக்கும் 6 மேயர்களுக்கும் புதுவை உள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிய குற்றங்களுக்கான நீதி வழங்கும் அதிகாரமும் சிறிய சிவில் நடைமுறை வழக்குகளைக் கவனிக்கும் அதிகாரங்களும் வளர்ந்த வெளிநாடுகளில் உள்ளது போல் நம் தமிழ் மண்ணிலும் வழங்கப்பட்டால் மக்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பதோடு எந்த குற்றமும் குறையும் இல்லாமல் நீதித்துறை மாறிவிடும்.

நீதி மன்றத்தில் தற்போது உள்ள தேங்கியுள்ள இ லட்சகணக்கான வழக்குகள் இல்லாமல் போகும் நாட்டின் நாணய மதிப்பு உயர்ந்து அரசியல் தூய்மை அடைந்து அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் இன்புற்று வாழ வழிப்பிறக்கும். எந்த அeவிற்கு தாய்மொழியை நாம் நடைமுறைக்குக் கொண்டு வருகிறோமோ அந்த அளவுக்கு இந்தத் திட்டங்கள் வெற்றி அளிக்கும் என்பது காந்தியடிகள் தெள்ளத் தெளிவாக மக்களுக்குக் கூறிய உண்மை (மேலே காந்திய கருத்துகளில் 8,9,10, பகுதிகள்).

தமிழ்நாட்டில் மேயர்களுக்கும், மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் அனைத்து நகரசபை உறுப்பினர்களுக்கும், புதுவை 30 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் அரசுஉயர் அதிகாரிகளுக்கும் (Gazetted Officer) எந்த அளவிற்கு ஊதியம் வழங்கப்படுகிறதோ அதே அளவிற்கு மேற்சொன்ன மக்கள் பிரதிநிதிக்கும் குறையாமல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் போதிய நிதியும் அதிகாரமும் பரிபூரணமாக வழங்கப்பட வேண்டும். இதனால் அவர்கள் தாங்கள் ஏற்றுள்ள பதவியை ஒரு கௌரவமான தொழிலாகக் கருதி நேர்மையாகவும், உற்சாகமாகவும் உழைக்க வாய்ப்பு ஏற்படும்.வெளிநாடுகளைப் போல் நேர்மையில்லாதவர்கள் ஆட்சிக்கு வரநேரிட்டாலுங்கூட ஒழுக்கக்கேடான முறையில் நடப்பதும், அநியாயமான முறையில் பொருள் ஈட்டுவதும் இயலாமற்போகும்.

மக்கள் பிரதிநிதிகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு இயற்கையாகவே தள்ளப்படுவார்கள்.தமிழ் மண்ணும் நம் பாரம்பரியம் பண்பாடு, கலாச்சாரத்தோடு ஒழுகும். மொழியின் மீதும் தமிழ் மண்ணின் மீதும், வசிக்கும் இடத்தின் மீதும், மக்களுக்குப் பற்றுண்டாகிச் சாதி மதங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமாக மாறிவிடும்.

எனவே தமிழ் மண்ணில் உள்e மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திலும் தங்கள் கட்சி தலைமையகத்திலும் பின்வரும் காரியங்களை நிறைவேற்றுவதற்காக சத்திய வழியில் முயல வேண்டும்.

அவை பின்வருமாறு :

1. தாய் மொழி தமிழை எல்லா விதங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லா வகைகளிலும் நடைமுறைப்படுத்துவது.
2. மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறந்த அலுவலகம் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தி அவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் பெற்றுத் தருதல், நிதியும், நீதித்துறையும் நிர்வாக அதிகாரத்தையும் அவர்களின் நேரடி கையாளுகையில் கொண்டு வர வேண்டும்.
3. நாட்டின் நாணய மதிப்பை உயர்த்த வேண்டிய நடவடிக்கை எடுப்பது.மேற்சொன்ன காரியங்களை நிறைவேற்றுதலே தற்போது நாட்டிற்கும் வீட்டிற்கும் நாம் செய்யும் முதற் கடமையாகும்.

நம் முன்னோர்களின் நாடாலும் ஆற்றலை நினைத்து பின்பற்றினால் தமிழ் மண் மேன்மை அடையும் என்பதில் சிறிதளவும் ஐயம் தேவையில்லை அவற்றில் சில பின்வருமாறு.

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்முறைகளில் அரசன்நாடு நல்கூர்ந் தன்று!நல்கூர்த்து பத்து, முதுமொழிக் காஞ்சி, பகுதி-9இ, பாடல் - 1.(முறை செய்யாத திட்டமிடப்படாத ஆட்சியாளர்களின் நாடு வறுமை அடையும்

2. நெடுமாட நீணகர்க கைத்திண்மை யின்னாஇன்னா நாற்பது பாடல் எண் - 36(பெரிய மாளிகையுடைய நகரத்தில் பொருள் இல்லாது இருத்தல் துன்பமாகும்.)

3. மன்று பறித்து உண்ணேல்ஒளவைப்பிராட்டி - ஆத்திச்சூடி பகுதி - 23(நீதி மன்றத்தில் உள்ளவர்கள் வழக்காடுபவரின் பணத்தைப் பறித்து வாழ்வது தவறு)

4. இன்மையின் இன்னாது உடைமைமுறை செய்யாமன்னவன் கோல்கீழ்ப் படின் திருக்குறள். அதிகாரம் 56, கொடுங்கோல் செய்யுள்-8.(திட்டமிடப்படாத அரசனுடைய ஆட்சியில் பொருள் இல்லாத வறுமை நிலையும் துன்பமானதாகும். செல்வ நிலையும் அதைவிட துன்மானதாகும்.

5. நாடெங்கும் வாழ கேடென்றுமில்லைஒeவையார் ஆத்திச்சூடி பகுதி - 49தாய்மொழி கல்வியையும் தமிழாட்சியையும் ஏற்படுத்தி தமிழ் மண்ணை வறுமையிலிருந்து நீக்குவோம்.

அன்புடன்
பொ.தி.ப. அறக்கட்டளை,22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008.

Monday, July 7, 2008

தமிழ் வழியில் மதுவே உணவாக, உணவே மதுவாக...

தங்கள் அனைவருக்கும் என் வணக்கம், எமது பெயர் தி.ப. சாந்தசீலன், எண். 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரியில் வழிவழியாக வசித்து வருகிறேன். கடந்த 22 ஆண்டுகளாக அரசியல் சாராமல், சாதி, மதம் சாராமல் நாட்டுப்பணி ஆற்றுவது எமது வழக்கம்.

மது அருந்தாமையை கடைப்பிடிப்பது எமது வழக்கம். எமக்கு சுமார் முன்னூறு பனை மரங்கள் புதுவை மாநிலம், இலாசுப்பேட்டை, தாகூர் கலை கல்லூரி அருகிலுள்ள நாவற்குளம் சிற்றூரில் இருந்தது. அந்தப் பனை மரங்களில் 20 வருடங்களுக்கு முன்னால் மது இறக்கப்பட்டது. அதைத் தவிர்த்துப் பதநீர் இறக்கி இன்றைய நாள் வரை மது இறக்குவதைத் தவிர்த்து வருகிறேன்.

1. தாய் மொழி வளர வேண்டும்.
2. நமது மரபுவழி தாவரங்கள் வeர வேண்டும்.
3. நமது முன்னோர்கள் போலப் பத்து கல்லணை பாசன பகுதிகளை நாம் உருவாக்க வேண்டும்.
4. எளிய முறையில் சுலபமாக நாட்டு மக்களுக்கு கல்வி, மருந்துவம் நீதி கிடைக்க வேண்டும்.
5. பணம் உள்ளவர்களிடம் உள்ள சோம்பலும், ஏழைகளிடம் உள்ள வறுமையும் ஒழிய வேண்டும்.
6. தமிழுக்கும், காந்தியத்திற்கும் மட்டுமே மேற்கண்ட சிக்கல்களைத் தீர்க்கும் சக்தி உண்டு என்று நம்பி கடந்த 25 ஆண்டுகளாக எமது பணியை ஆற்றி வருகிறேன். நிற்க.

மதுவைப் பற்றியது

1. புறநானூறு பாடலில் அதியமானைப் பற்றி ஒளவைப் பிராட்டி கூறும் பொழுது, அதியமான் மரவகை மது அருந்தியதையும், ஒளவை பிராட்டி மது (கள்ளு) குடித்ததையும் கூறும் பாடல் இங்கே தருகிறோம்.

2. இரண்டாவதாக மூன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் தென்னை மரத்தை, பனை மரத்தை, அத்தி மரத்தை, வேப்ப மரத்தைப் பற்றிய சித்தர்கள் எழுதிய விளக்கமான குரு பாரம்பரிய முறையில் கிடைத்த எமது நிகண்டிலிருந்து எடுத்து தரப்படுகிறது. இந்தக் குறிப்புகளைப் பற்றி தெளிய வேண்டுமெனில் - சித்த வைத்திய கல்லூரிகளை அணுகவும்.

மரவகை மதுவைப் பற்றி ஒளவைப் பிராட்டி

நமது அரசர்களும், நமது கவிஞர்களும், நம் தமிழ் சான்றோர்கள் பலர் வழக்கமாக மதுவை அருந்தியுள்ளார்கள். இதனால் உடலில் வெறித்தனமோ அல்லது குரோத தன்மையோ வராது. இதை மரத்தில் இருந்து எடுத்தவுடன் அருந்த வேண்டும். ஆனால் அரசாங்கமே இப்படி மது அருந்துவதை அனுமதிப்பதில்லை. அது புளிப்பேரி உடலைக் கெடுக்கும் தன்மை அடைந்த உடனே தான் அனுமதிக்கிறது.

நூலின் பெயர் : புறநானூறு
ஆதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றிய பாடல் பகுதி - ஒeவை பிராட்டி
தினை : பொதுவியல்
துறை : கையறுநிலை

""சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே !
பெரிகட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே !
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே !
பெருஞ்சோற்றாலும் நனி பல கலத்தன் மன்னே !
என்போடு தடிபடு வழியயல்லாம் எமக்கீயும் மன்னே !
அம்பொடு வேல்நுழை வழியயல்லாம் தான் நிற்கும் மன்னே !

இந்தப் பாடலில் உள்ள பொருள் :
ஒeவையார் அதியமானைப் பற்றி கூறியது அதாவது அதியமானுக்கு அதிக, கள் கிடைத்தாலும் குறைந்த அளவு கள் கிடைத்தாலும், எங்களுக்குக் கொடுத்துப் பகிர்ந்து தெரிந்து உண்பான் என்று கூறுகிறது. இதிலிருந்து ஒளவைப் பிராட்டி, அதியமான் உட்பட அனைத்துச் சான்றோர்கள் மரத்தின் கள் அருந்தியுள்ளார்கள் என்று தெரியலாம்.

பனை மரம் :வேறு பெயர்கள் : தாலம், கரும்புறும், ஏடகம், தாலி

பனம் பூ

பனையிலுறு பூவதுதான் பங்கமுறாக் குன்ம
வினையகற்றும் நீர்க்கட்டை மீட்கும் - முனையான
பன்னோய் ஒழிக்கும் பழஞ்சுரத்தைப் போக்கிவிடும்
மின்னே இதனை விளம்பு.

தீரும் நோய் : பூவை காயவைத்து கொலுத்தி வெள்ளை நிறம் வருமாறு சாம்பலாக்கி வைத்துக் கொண்டு ஏல அரிசியில் உண்ண வாதகுன்மம் போம். நீர்கட்டு உடையும், இதில் பல்துலக்க, பல் நோய் தீரும். புண்களைப் போக்கும்.

நுங்கு

நீர்வார் வியர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ் - சேர்வார்
விழிக்கரையாந் துஞ்சிளக்கு மென்சுரத மானே!
கழிக்கரையாந் தாளியிளங் காய்.

இதன் நன்மைகள் : புனையின் கடுக்காய் ( முற்றிய நூங்கு) நுங்கை உண்ணக்கூடாது.
1. தோலுடன் இருக்கும் இளம் நுங்கை நான்கு, ஐந்து சாப்பிட சீதபேதி நின்றுவிடும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

2. தோல் இல்லாமல் சாப்பிடும் இளம் நுங்கால் தேகம் மிகுந்த குளிர்ச்சி அடையும். விக்கல் நோய் குணப்படும். வாயு நீங்கும் நல்ல பசி உண்டாகும்.

3. நுங்கினில் உள்e நீர் வியர்க்குருவை போக்கும். அதாவது இந்த நீரை வியர்க்குருமேல் பூச வேண்டும்.

பனையின் மது

விந்துதிர மூறுமதி வெப்புடனே தாகம் போம்
பந்தமாந் தாதுவுமோ பாரிக்கும் - உந்துபித்தந்
தோன்றும்பா டாணங்கள் சுத்தியமாந் தோகைமின்னே !
என்ற பனைமது விற்கே.

இதன் பயன்கள் :
1. இதை இருபது நாட்கள் சாப்பிட்டு நிறுத்திவிட வேண்டும். பத்து நாள் இடைவெளியில் மீண்டும் அருந்தலாம்.
2. காலையில் இறக்கியவுடன் புதிய மதுவை பத்து அவுன்ஸ்க்கு மிகாமல் அருந்த வேண்டும்.
3. புளிப்பேறிய மதுவை அருந்தக்கூடாது. அருந்தினால் அறிவு கெடும். தேஜஸ் கெடும்.
4. ஆண், பெண் இரு பாலரின் இனவிருத்தி உறுப்புகள் மிகுந்த வலு பெறும் ( சுக்கீலம், •ரோணீதம் )

5. சொரி, சிரங்கு ஒழியும், பித்த நோய் போய் விடும். அழலை போகும். மேனி அழகுரும்.

பனங்கிழங்கு
நேர்ந்தவுட் சூடும் நிறைந்தபன் மேகமுடன் சேர்ந்தபல வீனஞ் •கமாகும் - ஒர்ந்து பலமறிந்து பே•ம் பனங்கிழங்கிற் குள்e நலமிதுவாம் நாட்டிற் பகர்.
1. பனங்கிழங்கு எளிதில் ஜீரணம் ஆகாது. அதனால் தேக திடத்திற்கு ஏற்றவாறு அeவறிந்து உண்ண வேண்டும். 2. கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி அத்துடன் உப்பு முதலியவை சேர்த்து பிட்டவியல் செய்து உண்ண வேண்டும். 3. இçeத்த தேகம் பருக்கும். பலகீனங்கள் போய் உடல் வலுபெரும். 4. சீதபேதி, இரத்தபேதியை போக்கும், மேகமும், கரபானும் போகும். தேகம் குளிரும், மேனி ஒளி பெறும் ( தேஜஸ் உண்டாகும்).

பனை வெல்லம்

வட்டுபன வெல்லத்தால் மார்பெரிச்சல் குன்மமறும்
முட்டுந் திரிதோ­ம் முன்னிற்கா - கட்டுபடா
வாந்தி ருசியின்மை வாளா யுற்றிடினும்
சாந்தி பெருகுமென்றே சாற்று.

1. காப்பி, தேநீர் இவைகளில் சாதாரணமாகச் சர்க்கரைக்குப் பதிலாக இந்த பனவெல்லத்தைப் போட்டு சாப்பிட்டால் தேகத்தின் வெப்பத்தை அடக்கும். பித்தம் தனியும். இதனுடன் சுக்கு, நிலக்குமிழ் மிளகு ஆகிய மூன்றும் குடிநீர் செய்து குடித்து வந்தால் சுரம், மாந்தம், மேகம், சோவை போகும்.

பனை வெல்லக் குடிநீர்
வல்ல சுரம்பெரு மாந்தம்போந் தோ­சம்போஞ்,
சொல்லவெகு மேகம்போஞ் சோகைபோம் - நல்லாய்கேள்!
தாலவெல்லஞ் சுக்குடனே சற்றே நிலக்குமிழ்ங்
காலமே காய்ச்சியணக் கால்.

தென்னை மரம்

வேறு பெயர்கள் : பூலோக கற்பக விருட்சம், நாளிகேரம், தாழை
தென்ன பூ

மேகம் அகக்கொதிப்பு வீறுவி ரத்தபித்தம்
வேக அசிர்க்கரநோய் விழுபிரமி - தேகத்தில்
வின்னம் பாலிக்கும் விடபாகம் போகவென்றால்
தென்னம்பாளைப் பூவை தின்.

தீரும் நோய்கள் : பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும். வெறும்பாடு எனும் இரத்தப்போக்கு நோய் குணமாகும். மேலும், உட்காய்ச்சல், இரத்தபித்தம், வி­மாக நோய்கள் குணமாகும்.

உட்கொள்ளும் முறை : இளசான, தென்னை பூவில் மேல் உள்ள பாலையை நீக்கி உள்ளிருக்கும் பூவை பூண் இல்லாத உலக்கையால் நன்றாக இடித்து பிழிந்து எடுத்த சாற்றை அறை அவுன்ஸ் தினம் மூன்று வேளை சமன்சலத்தில் விலாவி அருந்த வேண்டும்.

தேங்காய்ப்பால்

வாதமாம் பித்தமுறும் வன்கரப்ப னும்படகுந்
தாதுமிகவிருத்தியாந் தாழ்குழலே - போதநல்ல
அன்ன மிறங்கு மதியுருசியுண்டாகுந்
தென்னைகாய்ப் பாலாற் றெளி.

உபயோகம் : இதை அதிக அளவாய் உட்கொண்டால் பேதி ஆகும். இதை இரவில் அருந்தினால் தூக்கம் வரும். மேலும் இதனால் சுத்த இரத்தம் உண்டாகும். சுக்கில விருத்தி உண்டாகும்.
தீரும் நோய்கள் : பித்தவாதம், பாரிச வாதம், மூலம் தேக அழற்சி இடுப்பு வலி, வாய் நாற்றம், வாய் வேற்காடு முதலியன நோய்கள் போகும்.

இளநீர்

பச்சிளநீர் மேகம் பழஞ்சுரங்க ளைப்போக்குங்
கச்சுமுலை மாதே கபமறுக்கு - மெத்த
வயிற்றிற் கிருமியயாடு வன்சொறிகண் நோய்யும்
அயர்த்தோடச் செய்யு மறி.

அருந்தும் முறை : அன்றே அறுவடை செய்த வழுக்கை உடைய புதிய இeநீராக இருக்க வேண்டும். சிறிது ஆகாரம் உண்டபின் இளநீரை அருந்துவது தான் சிறந்தது.

தீரும் நோய்கள் : வெப்பம் தனியும், பித்த தோ­ம், கபா ஆதிக்கம் போகும். மனம் தெளிவு அடையும் நேத்திர துலக்கம் ( கண் ஒளி பெறும் ) தேகம் குளிரும், மூத்திர பெருக்கம், இலகுவாக, மலப்போக்கு உண்டாகும். பித்த தோ­ங்கள் நீங்கும்.

மது (கள்)

நாதவிந் தூறு நளிர்பாண் டொடுசோவை
வாதபித் தங்கிராணி வன்கரப்பான் - பேதியிவை
பொங்கி யதிகரிக்கும் புத்திகெடு மேகமுண்டாந்
தெங்கின்மது விற்கென்றே செப்பு.

அருந்தும் முறை : சூரிய உதயத்திற்கு அறை நாழிக்கு முன்னதாக இறக்கப்பட்ட இனிப்புள்ள கள்ளில் சிறிது சீரகம், ஏலம், கற்கண்டு தூள் கூட்டி அருந்த வேண்டும். இது புளித்து போதையை உண்டாக்கும் பதத்தில் சாப்பிட்டால் புத்தியைக் கெடுக்கும். பல வியாதிகளை உண்டாக்கும். ஆகவே, முன்பு கூறியதுபோல சூரிய உதயத்திற்கு அரை நாழிக்கு முன்னதாக இறக்கப்பட்ட இனிப்புள்ள கள்ளை அருந்த வேண்டும்.

தீரும் நோய்கள் : இளைப்பைப் போக்கும், கவலை ஒழிக்கச் செய்யும், சிறிது மயக்கம் உண்டாகும். வயிற்று கடுப்பு தீரும். தேகம் பூரித்து கொழுமை பெறும், சூடு தனியும், •ரோணித, சக்கில பெருக்க முறும். நீர் தாரை வெப்பு அடக்கும்.

தேங்காய் நெய்

தேங்காயி னெய்யதனைற் றீயால் வருபுண்போம்
பாங்காகக் கூந்தல் படாந்தேறு - நீங்காத
பல்லடியின் ணேயும் படர்தா மரைசிரங்கு
அல்லறப் போமென் றறி.

தீரூம் நோய்கள் : இந்த எண்ணெய்யுடன் சுண்ணாம்பு நீருடன் கூட்டி விரலால் சிறிது நேரம் அடிக்க நெய் போல் கட்டி உறையும். அதை நெருப்புப்பட்ட புண்களுக்கு தடவி வர விரைவில் ஆறும். மேலும், சுண்ணாம்பு நீரைக் கலக்காத சாதாரண எண்ணெய் சிரங்கு, படர் தாமரையைப் போக்கும். இது பலவிதமான கூந்தல் தைலங்களில் சேரும், தலை மயிர் வeரும்.

வேம்பு

புந்தியிதைத் தீட்டுவிக்கும் புன்பிணையை யோட்டுவிக்கு
மிந்தியத்தை நன்றா யிசைவிக்கும் - சந்ததமம்
வீறுண்டாங் கற்ப மிகவுண்டா மெஞ்ஞான்றும்
மாறன்றா ரையமில்லா மல்.

பொதுப் பயன் : புத்தியைத் தெளிவிக்கும், கப பிணியை ஓட்டும் . வீரீயத்தை உண்டாக்கும். இது கற்ப மருந்தாகவும் இருக்கும். இதன் இலை, இதன் ஈர்க்கு, இதன் பூ, காய், பழம், வித்து, பட்டை, இதன் எண்ணெய், இதன் பிசின் முதலான அனைத்து பாகங்களும் நன்மை தரும். மிகுந்த மருத்துவ குணம் உடையது.

இதன் மதுவின் பயன் : பசியை தூண்டும், உடலுக்கு வன்மை தரும், மேக நோயை போக்கும், வாயு நோய்கள் ஒழியும், பழைய சுரம் போகும்.

குறிப்பு : வேப்ப மரத்தில் இருந்து மது எடுக்கும் முறையை உடனே தொடர வேண்டும். உடனே புதுபிக்க வேண்டும். உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையயன்றால் அடுத்த தலைமுறை இதைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் போய்விடும்.

அத்தி மரம்

வேறு பெயர்கள் : சுப்பிரதஷ்டம், அதம், உதும்பரம்.

அத்தியின் மது

அத்திமே கஞ்சூ டதிமயக்கந் தாகமும் போம்
அத்திமா வேரிலுண் டாமதுவில் - நித்தியமுஞ்
சீனியேனும் பேயன் செங்கனியே னுங்கலந்தே
பானுவுத யங்குடித்துப் பார்.

அத்தி மரம் பயன்கள் : அத்தி மர வேரை சீவி, அதனிலியிருந்து மது இறக்க வேண்டும். பூரா சர்க்கரையாவது, பேயன் வாழைக்கனியாவது கலந்து தினமும் சூரிய உதய காலத்தில் உண்ண வேண்டும். உட்சூடு, மூர்ச்சை, மேக வெட்டை, பித்த மயக்கம் அதிதாகம் போகும். நீர் வேட்கை, எலும்பைப் பற்றிய மேகம் போகும்.

அத்திப்பால்

நீரிழிவு போகும். பித்தம் போகும், அதிக நீர் போகுதல் நிற்கும், கீழ் பிடிப்பு போகும்.

அத்திப் பிஞ்சு

ஆனைக் கன்றி லொருபிடியும் அசுரன் விரோதி யிளம் பிஞ்சும்
கானக் குதிரைப் புறத்தோலுங் காலிற் பொடியை மாற்றினதும்
தானைத் தாய்கொல் சலத்துடனே தகவா எட்டொன் றாக்கொள் நீ
மானைப் பொருவும் விழியாளே வடுகுந் தமிழும் குணமாமே.

தீரும் நோய்கள் : பால் நிறைந்த அத்திப் பிஞ்சுடன், வேலம் பிஞ்சு, மாம்பட்டை, சிறு செறுப்படை இவைகளை ஒரு நிறையாகக் கொண்டு வாழைப்பூ சாற்றில், குடிநீர் இட்டு குடிக்க வயிற்று கடுப்பு, சீதபேதி, இரத்த பேதி முதலியன போக்கும்.

அத்திப்பழம்

இது குருதியை பெருக்கும், மலக்கட்டு போக்கும், சிறுநீரில் உள்e மதுவை நீக்கும், நாக்கு வறட்சி, உடல் வெதுப்பலை போக்கும். மேற்கண்ட சித்தர்கள் அருளிய மொழி வாக்குகளிலிருந்தும் ஒளவை பிராட்டி கூறியதிலிருந்து மரவகை மதுக்கள் மனித உடலுக்கு மிகுந்த நன்மை தரும். நம் பழந்தமிழ் நாட்டில் அரசர் முதல் சான்றோர்கள் வரை பொது மக்கள் உட்பட அனைவரும் மதுவை அருந்தி உள்ளார்கள் என்பதை நன்கு அறியலாம்.

மதுவை இறக்கியவுடன் புதியதாக அளவுவோடு அருந்த வேண்டும். மதுவை புதியதாக இறக்கியவுடன் அருந்தாமல் அது புளிப்பேறியவுடன் அதை நேரம் கடந்து காலம் தாழ்த்தி அருந்துவதால் அது புத்தியைக் கெடுத்து உடலையும் கெடுக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது.

பெண்களுக்காகவும், பதவிக்காகவும் பொன், பொருளுக்காகவும் சண்டை போட்டுக்கொள்வது இன்று வரை மனிதன் இயல்பாக உள்eதுபோல் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மரவகை மதுவை (கள்ளு) வைத்துக் கொண்டு சூதாட்டம் ஆடுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம். இது மனிதனின் மிகத் தாழ்ந்த குணத்தை வெளிப்படுத்துகிறது. கீழ்த்தரமான, மனிதாபிமானமற்ற செயல்களாகவும், மனிதன் வெளிப்படுத்துகிறான்.

ஆகவே, கீழ்க்கண்ட வகையில் மர வகை மதுவை மக்கள் பயன்படுத்த அரசுஅனுமதி அளிக்க வேண்டும். இதைப் படிக்கும் நீதித் துறையினர், மேன்மை தாங்கிய நீதிபதியினர் மரங்களிலிருந்து கிடைக்கும் மதுவகைகளை இந்தியாவிற்குப் பொருந்தாமல் தமிழ்நாட்டில் மட்டும் உணவு பொருளாகவே நடைமுறைப்படுத்த உத்திரவிட வேண்டும்.

தேனும் மதுதான். அளவுக்கு அதிகமாக அதை அருந்தினால் மயக்கம் வரும். மசாலா பொருட்களில் உபயோகப்படுத்தும் கசகசா போன்ற பொருளும் மயக்கம் தரக்கூடியவை. இவைகளை எல்லாம் நாம் நம் உணவு பொருளாகவே கருதுகிறோம்.

போதைப் பொருளாகக் கருதி ஒதுக்கி விடவில்லை. பொது மக்களில் பலர் தற்பொழுது வெகுவாக உணவு பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் சில பேர் நாற்பது, ஐம்பது வயதிலேயே மரணம் அடைகிறார்கள். இதனால் நாம் உணவு பொருளைத் தடை செய்ய முடியுமா? அல்லது கட்டுப்படுத்தத்தான் முடியுமா?

இதில் இரண்டுமே செய்ய முடியாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் வி­சம், ஆனால் அமிர்தமான மரவகை மதுக்களை வி­சமாக்கி மக்களை உண்ணச் செய்து பழக்கப்படுத்துகிறோம். ஆகவே, மேலும் அத்தி மரம், வேப்ப மரம் மது எடுக்கும் முறையை ஒரு தலைமுறையினர் மறந்து விட்டார்கள். அல்லது மறக்க படுத்தப்பட்டுவிட்டார்கள். அறுபது வயதிற்கு மேற்பட்ட மரமேரிகளிடம் இருந்து நாம் சிரமப்பட்டு இந்த முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதே நிலை நீடித்தால் சிறிது காலத்தில் அத்தி மரத்திலிருந்தும், வேப்ப மரத்திலிருந்தும் எப்படி மது இறக்கலாம் என்ற கேள்வியே எழுந்துவிடும். ஆகவே, மரவகை மதுக்களை உணவு வகைகளில் சேர்க்க வேண்டுமே ஒழிய மது வகைகளில் சேர்க்கக் கூடாது. இதை அரசு ஆணையிட வேண்டும். நீதிமன்றம் உத்திரவாக அரசுக்கு ஆணையிட வேண்டும்.

அரசியல் அன்பர்களும், மக்கள் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இதை புரிந்து மரவகை மதுவை உணவாக அறிவிக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்தவும், பத்திரிகை அன்பர்களும் இது சம்பந்தமாக நன்கு தெரிந்து, புரிந்து, தெளிந்து பலவகைகளிலும் விவரம் அறிந்து தொடர்ந்து இதற்கு ஆதரவாக எழுதி இதை நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமாய் பேரன்போடு வேண்டுகிறோம்.